கண்ணீர் விட்டு கதறும் மதி… தோள் கொடுக்கும் மலர் மற்றும் ரேவதி… எமோஷனலா இருக்கே!
விஜய் தொலைக்காட்சியின் லேட்டஸ்ட் தொடராக வெளியாகி இருக்கும் அழகே அழகே சீரியலில் மதி தற்போது தங்கராஜ் வீட்டில் இருக்கிறார். இதை தொடர்ந்து இன்று பல பரபரப்பான எமோஷனல் திருப்புங்கள் நடந்திருக்கிறது.
வீட்டிற்கு சென்றுவிட்டேன் என மதி கூறியதை நம்பி அவரை பார்க்க அவர் அப்பா வீட்டிற்கு வருகிறார். ஆனால் அங்கு இருந்த அவருடைய மாமனார் மற்றும் மாமியார் இருவரும் மீண்டும் வாய அடங்காமல் மதிக்குறித்து மோசமாக விமர்சிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மதியின் அப்பா மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பின்னால் இருந்து வரும் மலர் அவரிடம் மதி பற்றி நன்றாக பேசி, அவளுக்கு யாரும் இல்லை என நீங்க நினைக்காதீங்க. எப்போதும் நாங்கள் இருப்போம் என ஆறுதல் சொல்கிறார்.
தங்கராஜ் வீட்டில் மதி குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சுரேஷ் அங்கு வருகிறார். பின்னர் மதியை பார்க்க அவருடைய அப்பாவும் அங்கு வர தங்கராஜ் அவரை தனியாக அழைத்து மோசமாக பேசி மதி குறித்து சொல்கிறார்.
பின்னர் மதியும் அவருடைய அப்பாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதியின் திருமணத்தில் தான் அவசர முடிவு எடுத்துவிட்டோமோ என அவர் அப்பா கலங்க அந்த நேரத்தில் அங்கு வரும் ரேவதி அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
பின்னர் அவர் மலரும் இதை தான் சொன்னாங்க. நீங்களும் அந்த பெண்ணும் இருப்பதால்தான் என் மகள் மீது எந்த பயமும் இல்லாமல் இருக்கிறேன் என அவர் சொல்லிவிட்டு கண்ணீர் விட அவரை கட்டிக்கொண்டு மதியும் கலங்கி அழுகிறார். கண்டிப்பாக இது அப்பா மகள் பாசத்துடன் பார்க்கும் அனைவருக்கும் எமோஷனலாக தான் இருக்கும்.
