மலருக்காக சுரேஷை திட்டும் மதி… மாமியாருக்கே விபூதி அடிச்சிட்டீங்களே!!

அழகே அழகு சீரியலில் இன்று பல சம்பவங்கள் நடந்து இருக்கிறது. 
 
azhage azhagu

Azhage Azhagu: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக தற்போது ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள். 

மலரும் பாக்கியராஜும் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்து மதிக்கு கால் செய்ய அவர் வந்து கதவை திறக்கிறார். உங்க ஆசை எல்லாம் நடந்துச்சா என அவர் கேட்க சூப்பரா போச்சு என அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே சுரேஷ் லைட்டை போட்டு விட்டு வருகிறார். 

என்ன வெளில போய்ட்டு வந்தீங்களா எனக் கேட்கும் போதே மாமியாரும் வந்துவிட மலர் அலறிவிடுகிறார். ஆனால் மதி அமைதியாக அவரை சமாளிக்கிறார். தலைவலி அதுனால ஹாஸ்பிட்டல் போகலாமா எனப் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்கிறார். அதுக்கு என்ன இப்படி ட்ரெஸு எனக் கேட்க போட்டு பார்த்தேன் என சமாளிக்கிறார். 

இப்போலாம் ஹாஸ்பிட்டல் போக வேண்டாம். மாத்திரையை போட்டுட்டு போய் படு எனத் திட்டிவிட்டு செல்கிறார். சுரேஷ் என்ன இதெல்லாம் எனக் கேட்க மலரின் ஆசையை சொல்கிறார். நல்ல கொண்டாடுனீங்க பர்த்டே என கலாய்த்துவிட்டு செல்கிறார். 

ரூமுக்கு வர மதியிடம் அவங்க போனது உனக்கு தெரியுமா எனக் கேட்க தெரியும் என்கிறார். ஏன் என்னிடம் சொல்லலை எனக் கேட்க நம்ம அந்த உறவிலா இருக்கோம் எனக் கூறிவிடுகிறார். பாக்கியராஜ் தூங்கிக்கொண்டு இருக்கும் மலரை பார்த்து சந்தோஷப்படுகிறார். 

ஆனாலும் ரேவதி நிலைமை குறித்து யோசனையாக இருக்க அவரை பார்க்க போகலாம் என அவர் வீட்டுக்கே சென்று விடுகிறார். அவர் வாசலில் அமர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் வந்து கேட்க அவரும் அண்ணனிடம் உண்மையை சொல்லாமல் சமாளிக்கிறார். 

ஒரு கட்டத்தில் தங்கராஜ் வந்து கதவை திறந்து வீட்டுக்குள் வர சொல்ல பாக்கியராஜ் உண்மையை சொல்லு. இல்ல வா வீட்டுக்கு போவோம் எனக் கூப்பிடுகிறார். ஆனால் ரேவதி அப்போதும் உண்மையை சொல்லாமல் சமாளித்துவிட்டே செல்கிறார். 

From Around the web