மாமியாருக்கு வந்த புது பிரச்சனை… என்ன செய்ய போகிறது மருமகள் கூட்டணி!

 

அழகே அழகு சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள். 

மதி அவர் மாமியாரை டாக்டரிடம் அழைத்து செக் செய்கிறார். அவர் பிபி சோதித்து விட்டு என்ன இவ்வளோ இருக்கு. இது புதுசா வந்து இருக்காது. எப்பையோ வந்துட்டு ரொம்ப நாளா இருப்பதால் தான் இப்படி பிரச்சனை வந்துருக்கு என்கிறார். 

அதுமட்டுமில்லாமல் பல டெஸ்ட்டுகளை எழுதி கொடுத்து வாக்கிங் போங்க என சொல்லி அனுப்புகிறார். மாமனார் வந்து எங்க பிரச்சனை பண்ணிட்டு இருந்தா ஆளை காணும் எனக் கேட்க மலர் மதியுடன் ஹாஸ்பிட்டல் போய் இருக்கும் விஷயத்தை சொல்கிறார். மாமியார் மதி சரியாக வர டாக்டர் சொன்னதை சொல்கிறார். 

ஆனாலும் மாமனார் பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்கிறார். பின்னர் அவருக்கு டெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார். பின்னர் மதி மலர் இருவரும் ரேவதியுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது தங்கராஜ் ஹெல்தியாக சாப்பிடுவதை சொல்கிறார். 

அவரை வைத்து பேச வைத்தால் இங்கையும் சாப்பாட்டை மாத்தலாம் என மருமகள்கள் முடிவெடுக்கின்றனர். இதை தொடர்ந்து பாக்கியராஜை டெஸ்ட்டுகளை எடுக்க வர சொல்லிவிடுகிறார் மலர். அப்போ இனி வீட்டுக்குள்ளையே மூவர் கூட்டணிதான் போலயே!

From Around the web