அழகே அழகு சீரியலில் அடுத்தக்கட்ட பரபரப்பு… என்ன செய்ய போகிறார் மதி?

கொடுமைக்கார மாமியார் குடும்பத்தை கேள்விகளால் லாக் செய்யும் மதியை சுரேஷ் வெளியில் துரத்த ப்ளான் செய்துவிட்டார். 
 
azhage azhagu

லேட்டஸ்ட் எண்ட்ரி அழகே அழகு சீரியலில் இந்த வாரம் பலரிடமும் அப்ளாஸ் வாங்கும் அளவு ஒரு பரபரப்பான எபிசோட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மதி உங்களுக்கு பையனை பார்த்து வளர்க்க தெரியலை எனக் கூறிவிடுகிறார். இதில் அவர் மாமியார் உடனே நெஞ்சு வலிப்பதாக ஒரு சீனை போட்டு குடும்பத்தில் பெரிய பிரச்சனையை கிளப்பி விடுகிறார். இதில் எல்லாரும் வந்து விடுகின்றனர். 

ஒரு பக்கம் மதி பேசியதை மாற்றி பேசி சுரேஷை வர சொல்கிறார். அதே நேரத்தில் மலர் கால் செய்து பாக்கியராஜிடம் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். இதில் பாக்கியராஜ் உண்மையாகவே அம்மாக்கு வலி வந்திருக்கோ எனக் கேட்கிறார். ஆனால் மலர் அதெல்லாம் உண்மையா இருக்காது. 

அப்படி உண்மையா இருந்தால் அவங்களே ஆம்புலன்ஸில் ஏறி இருப்பாங்க என்கிறார். மாமனாரும் மதியை தப்பாக பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் மதியின் அப்பா அம்மாக்கு கால் செய்து சகட்டுமேனிக்கு பேசிக்கொண்டே இருக்கின்றனர். 

அவர் அவங்களை ஏன் கஷ்டப்படுத்திட்டு இருக்கீங்க என சத்தம் போடுகிறார். ஆனாலும் மதியின் பேச்சை மீறி அவர்களை வீட்டுக்கு அழைத்து அசிங்கப்படுத்துகின்றனர். பாக்கியராஜ் மலர் அமைதியாக பேச முயற்சி செய்தும் எதுவும் செய்ய முடியாமல் நிற்கின்றனர். மதியை சுரேஷ் வீட்டை விட்டு வெளியேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web