மதியிடம் கோபப்படும் மலர்… சிட்டிக்கு கோபம் வந்துடுச்சுப்பா!

அழகே அழகு தொடரின் இன்றைய தொகுப்புகள்
 
azhage azhagu

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு தொடரில் மீண்டும் மதி வீட்டுக்கு வரும் எபிசோட் ரணகளமாக மாறி இருக்கிறது. இன்னொரு புதிய கதைக்களமும் உடைந்து இருக்கிறது. 

சுரேஷ் மீது புகார் கொடுக்க மதி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். அங்கு தங்கராஜ் மாமனார் மற்றும் மாமியாரை அழைத்து வருகிறார். இன்ஸ்பெக்டர் அழைத்து வந்து விசாரிக்க இங்கு அவர் திமிர் தனமாக பேசுவதை சரியாக கண்டுபிடித்து விடுகிறார். 

தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே இருக்க இங்கையே இப்படி பேசுறீங்க. வீட்டில் இந்த பொண்ணை எப்படி பேசி இருப்பீங்க? வாய மூடுங்க என சத்தம் போடுகிறார். சுரேஷ் அப்பா, அம்மா வாயை அடக்கி உட்கார வைக்க இன்ஸ்பெக்டர் மதிக்கு ஆதரவாக பேசுகிறார். 

அதிலும் வீட்டுக்கு கூப்பிட்டு போய் ஒழுங்கா வச்சு வாழுங்க. இல்ல கேஸ் போடுவேன் என மிரட்டி அழைத்து செல்ல சொல்கிறார். மதியும் அவர்களுடன் கிளம்புகிறார். காரில் ஓவராக மாமியார் புலம்பல் சீனை போட்டு கொண்டு இருக்கிறார். மதி அமைதியாகவே இருக்கிறார். 

வீட்டுக்கு வர மலர் வாசலில் வந்து மாமியாரை அழைத்து செல்கிறார். ஆனாலும் மதியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முகத்தை காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறார். ரேவதியிடம் அத்தை மாமா முகமே சரியில்லையே எனக் கேட்க அங்கு நடந்ததை சொல்கிறார். 

பின்னர் மலர் தண்ணி எடுக்க உள்ளே செல்ல மதியிடம் உங்களிடம் பேச வேண்டும் எனக் கேட்கிறார். ஆனால் அப்போதும் வாய் திறக்காமல் சென்று விடுகிறார். ரேவதி மதியை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். 

சுரேஷையும் அங்கு வர சொல்லி இருப்பதாக சொல்கிறார். மதியும் எதுவும் கூறாமல் ரேவதியுடன் கிளம்பி செல்கிறார். அவர் வீட்டில் வந்து மதியை ரூமில் செட்டில் செய்து விடுகிறார். எல்லாரிடமும் அடங்கி செல்லும் மலர் மதியிடம் முகம் காட்டுவது அவர் கேரக்டருக்கே வித்தியாசமாக இருக்கே. அப்போ பெரிய மருமக கெத்து காட்ட ஸ்டார்ட் பண்ணுறாங்களோ!

From Around the web