ஊர் சுற்றும் மலர் - பாக்கியராஜ்… பயத்தில் மதி… அழகே அழகு தொடரில் என்ன நடந்தது?

அழகே அழகு தொடரில் டிஆர்பி தற்போது டாப் 10 இடத்தினை பெற்று இருக்கிறது. 
 
azhagu azhagu

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அழகே அழகு. இதில் இரண்டு மருமகள்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இதில் அமைதியான மருமகளாக மாமியார் குடும்பத்திற்கு அடிமையாகவே இருக்கும் அழகு மலர். இந்த வீட்டில் குடும்பத்தின் கட்டாயத்தின் பேரில் இரண்டாவது மருமகளாக வருகிறார் அழகு மதி. தைரியமாக தான் நினைத்ததை உடனே சொல்பவராக இருக்கிறார். 

தற்போது மலரின் பிறந்தநாளை வீட்டில் மதியால் கொண்டாடப்படுகிறது. அவரை கோயிலுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் சாப்பாடை பார்த்து கொள்கிறார். வகை வகையாக மலருக்கு வேலை வைத்த மாமியாரை வெறும் சாம்பாரை செய்து வைத்து அதை சாப்பிடவும் வைத்து விடுகிறார். 

மலருக்கு கேக் வெட்டி கிப்ட் கொடுத்து சந்தோஷமாக பார்த்து கொள்கிறார். அவரை பாக்கியராஜூடன் வெளியில் அனுப்பிவிட்டு குழந்தையை பார்த்து கொள்கிறார். மலர் ஆசைப்பட்டது போல பைக் ரைட் சென்று பீச்சில் விளையாடுகின்றனர். 

பின்னர் சாப்பிட்டு விட்டு ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது தங்கராஜின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்க்க மனைவி குறித்து மோசமாக வைத்து இருக்கிறார். இதில் பாக்கியராஜ் டென்சனாக மலரும் யோசிக்கிறார். 

ரேவதி சொல்லாமல் வீட்டிற்கு போனதால் அவரை வெளியில் அனுப்பிவிட்டார். மதி முழித்து இருக்க சுரேஷ் வந்து கதவை தட்டுகிறார். இருவரும் குழந்தையுடன் ஒன்றாக தூங்க செல்கின்றனர். இனிமேல் இந்த தொடரிலும் பரபரப்பு தொற்றிக்கொள்ளலாம். 

From Around the web