ரோகிணிக்கு செக் வைச்ச முத்து… மீண்டும் பாக்கியாக்கு ரூட் போடும் கோபி… இந்த வாரம் கலக்கலா இருக்கும் போலயே!

by Akhilan |
siragadikka aasai bakkiyalakshmi
X

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டுகளுக்கான சுவாரஸ்ய அப்டேட்களின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: ஏற்கனவே சமீபத்திய வாரங்களாக ரோகிணிக்கு எல்லா விதத்திலும் ஆப்பு தயாராகி வருகிறது. முதலில் அவர்கள் ஏமாற்றிய 30 லட்சத்துக்கே பெரிய அளவில் விஜயா ரியாக்ட் செய்து இருந்தார். அதில் இருந்தே முத்து மற்றும் மீனாவுக்கு ரோகிணியின் மீது சந்தேகம் எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து வந்தவர்களை பார்த்து பல் வலியென ரோகிணி ஓடியதும் தற்போது மேலும் வலுவாக அடுத்த பிளானை முத்து மற்றும் மீனா போட்டு இருக்கின்றனர். அதாவது மலேசியாவிற்கு செல்ல முடிவெடுத்து இருக்கின்றனர். இதற்காக அண்ணாமலையிடம் கையெழுத்து வாங்கவும் வருகின்றனர்.

இதில் இருந்து தப்பிக்க பிளான் போடும் ரோகிணி எங்க அப்பா ஜெயில இருக்கும் போது அவங்க அங்க போறது சரியில்லை என மனோஜை பேச வைக்க இருந்து முத்து மற்றும் மீனா விடாப்பிடியாக இருக்கின்றனர். விஜயாவும் போய்ட்டு வரதுதான் சரி எனக் கூறி ரோகிணிக்கு திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியை ஏற்பாடு செய்து விட்டனர்.

பாக்கியலட்சுமி: ஏற்கனவே பாக்கியா வீட்டிற்கு வந்து இருக்கும் கோபி ஓவராக அவரை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கிறார். எதற்கெடுத்தாலும் பாக்கியா சரியென கூற ராதிகா கோபம் கொள்கிறார். கேஸை வாபஸ் வாங்கியது வேறு இன்னும் சந்தோஷமாகி விடுகிறது.

தற்போது பாக்கியாவின் ஆர்டருக்கு கோபியின் ஆட்கள் மட்டும் இல்லாமல் அவரும் வேட்டி சட்டையுடன் வந்து ஓவராக ஹெல்ப் செய்கிறார். இதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷமாகி விடுகிறார். பாக்கியாவின் சமையல் திறமையை கோபி பாராட்ட பாக்கியா நன்றி சொல்கிறார். ராதிகாவிடம் ஈஸ்வரி நீ போய்ட்டா அவங்க சந்தோஷமா இருப்பாங்க என்கிறார்.

Next Story