விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. கணவனுக்கு இரண்டு மனைவிகள் உள்ள கதை. அதுவும் முதல் மனைவிக்கு தெரியாமல் கதையின் நாயகன் தனக்கு பிடித்த காதல் மனைவியுடன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் கதை.
இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என கூட்டுக் குடும்பமாக போய்க் கொண்டிருக்கும் கதையில் முதல் மனைவியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காத கணவனுக்கு தான் பிடித்த காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்து வருகிறான். இது ஒரு கால கட்டத்தில் முதல் மனைவிக்கு தெரியவர இப்பொழுது விவாகரத்தில் வந்து நிற்கிறது.
இந்த நிலையில் கணவனாக நடிக்கும் கோபி கதாபாத்திரத்தை மக்கள் சீரியலை பார்க்கும் போதெல்லாம் திட்டி தீர்க்கின்றனர். அது வெறும் நடிப்பு என தெரிந்தும் ரசிகர்கள் அவர் மீது வெறுப்பை காட்டுகின்றனர். இதையெல்லாம் அறிந்த கோபியாக இருக்கும் நடிகர் சதீஷ் தனது ஆதங்கத்தை வீடியோ போட்டு வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சமயம் சீரியலை விட்டே போயிறலாம் என எண்ணியுள்ளேன். அந்த அளவுக்கு வருத்தமாக இருக்கிறது இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு. சில பேர் கவலை படாதீர்கள் , இது சீரியல் தானே என சொல்லி ஆறுதலாற்றுகின்றனர். இன்னும் அடுத்த 5 நாள்களுக்கு இன்னும் மோசமாக இருக்கப் போகிறது. அதையும் பாருங்க. நான் கோபியாக உங்களை மிகவும் கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…