பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமேக்ஸ் இதுதானாம்!... இதுக்கு பருத்தி மூட்டை குடவுனிலயே இருந்துருக்கலாம்!

பாக்கியலட்சுமி சீரியல் கிளைமேக்ஸ் நோக்கி நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது பாக்கியலட்சுமி சீரியல். ஆனால் அந்த சீரியலின் புரோமோ வெளியான சமயத்தில் லாக் டவுன் அறிவிப்பு வந்ததால் சீரியலை குறிப்பிட்ட நாளை விட தாமதகமாகவே வெளியானது.
ஆரம்பத்தில் டல்லடித்த சீரியல் பெரிய அளவில் வில்லத்தனம் இல்லாமல் இயல்பான குடும்ப கதையாக ஒளிபரப்பாக ரசிகர்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். அதிலும் ஆண்ட்டி ஹீரோவான கோபிக்கு பலரும் ரசிகர்கள் ஆகும் அளவுக்கு சீரியலுக்கு வரவேற்பு கிடைத்தது.
ஒரு கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த கதையை முடிக்க தெரியாமல் தடுமாற தொடங்கினர். போட்ட கதையையே மீண்டும் போட்டு அறுக்க ரசிகர்களுக்கு வெறுப்பை தட்டியது. அதை தொடர்ந்து ஒரே கதையை இருந்த எல்லா ஜோடிகளுக்கும் போட்டது என உச்சப்பட்ச காமெடியை செய்தனர்.

இதையடுத்து இந்த சீரியலை எப்படா முடிப்பீங்க எனக் கேட்ட நேரத்தில் கோபி இரண்டாம் மனைவி விவாகரத்து வாங்கி சென்றார். சீரியலும் சில மாதம் நகர்ந்த நிலையில் அப்பா முடிக்க போறாங்க என நம்பியை நேரத்தில் புது கதையை உருவாக்கி இனியா கல்யாணம் அவரின் மாமனார் என ரூட்டை ஆரம்பித்து பாக்கியாவை பழைய இடத்துக்கே கொண்டு வந்தனர்.
என்னடா இது என பலரும் சீரியலை முடிங்க புண்ணியமா போகும் எனக் கடுப்படித்த நிலையில் தற்போது ஒருவழியாக கிளைமேக்ஸ் எடுத்து வந்துள்ளனர். அந்த வகையில் இனியா தன்னுடைய கணவரை கொன்று விட்டதால் அவர் தந்தை கோபி அந்த பழியை ஏற்றுக்கொண்டு விடுகிறார்.
தொடர்ந்து இனியாவிற்கு அவர் காதலன் ஆகாஷை கல்யாணம் செய்து வைக்கின்றனர். அந்த திருமணத்தில் ராதிகா வர அவருடன் மீண்டும் சேருவாராக இருக்கலாம். என்னமோ ஒருவழியா வரும் வாரத்துடன் பாக்கியலட்சுமி சீரியலுக்கு எண்ட் கார்ட் என்னும் போதே நன்றாக உள்ளது.