Bakkiyalakshmi: ஈஸ்வரிக்கு ஒரு எண்ட்டு கார்டே இல்லையா? சீக்கிரம் முடிச்சிவிடுங்கப்பா…

by Akhilan |
bakkiyalakshmi
X

Bakkiyalakshmi: பாக்கியாவை நாளை நீதிமன்றம் வரக்கூடிய நோட்டீஸ் வந்திருக்க இதைக் கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். நீ இன்னும் கேச வாபஸ் வாங்கலையா. என் பையன் ஏற்கனவே பெரிய ஆபரேஷன் செய்து வந்திருக்கிறான்.

இப்போ அவனுக்கு எந்தவித மன உளைச்சலும் இருக்கக் கூடாது என பேசிக்கொண்டே செல்கிறார். ஈஸ்வரி. ஆனால் நடுவில் வரும் கோபி நான் செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கிறேன். பாக்கியாவை ஏதும் சொல்லாதீங்க எனக் கூறிவிடுகிறார்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் பாக்கியா குறித்து எதுவும் யோசிக்காமல் அங்கிருந்து சென்று விடுகின்றனர். எழில் மற்றும் அமிர்தா பாக்கியாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போ அங்கு வரும் ஈஸ்வரி, நீ கல் நெஞ்சக்காரியா மாறிட்ட. என் பையன் உனக்காக விட்டு கொடுக்கிறான்.

அவனுக்கு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா? இப்படியே பண்ணாதே. நாளைக்கு கேசில் அவனுக்கு தண்டனை கொடுத்தால் நான் செத்துப் போய் விடுவேன். அவனை ஜெயிலுக்கு அனுப்பி என்னையும் சுடுகாட்டுக்கு அனுப்பிடுங்க என திட்டி விட்டு செல்கிறார்.

கோபி கவலையாக அமர்ந்திருக்க ராதிகா அவரை சமாதானம் செய்கிறார். உங்களுக்கு வக்கீல் ஏற்பாடு செய்திருக்கிறேன் எனவும் கூறுகிறார். மனைவியாக நான் இதை செய்தாலும் பெண்ணாக பார்க்கும்போது நீங்கள் செஞ்சது பெரிய பாவம் எனவும் கூறுகிறார்.

நான் செஞ்சது பெரிய தப்புதான். அப்போ அது என் கண்ணை மறைச்சிருச்சு. அதுக்கு அப்புறமும் பாக்கியா என் உயிரை காப்பாத்துனதுக்கு அப்புறம் தான் நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு புரிஞ்சுச்சு. அது என்ன போட்டு டெய்லியும் உறுத்திக்கிட்டே இருக்கு என்கிறார்.

அடுத்த நாள் காலை பாக்கியா நீதிமன்றம் கிளம்ப ஈஸ்வரி அவரை திட்டி விட்டு செல்கிறார். நீதிமன்றத்திற்கு கோபி கிளம்ப தானும் வரேன் என ஈஸ்வரி கூற அவர் மறுத்துவிட்டு ராதிகாவை அழைத்து செல்கிறார். நீதிமன்றத்தில் எல்லோரும் ஆஜராகி விடுகின்றனர்.

Next Story