Bakkiyalakshmi: மயூவை மோசமாக பேசிய ஈஸ்வரி… கடுப்படித்த பாக்கியா… போர் அடிக்காதீங்கப்பா!..
Bakkiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுக்கான தொகுப்புகள்.
காலையில் ஈஸ்வரி செழியன் மற்றும் இனியாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் பாக்கியாவும் கோபியும் சேர்ந்து வாழணும் என அவர் கூற அதெல்லாம் சாதாரண விஷயமா என கேட்கிறார் செழியன். நீ மாலினிட்ட போயிட்டு திரும்பி வரவில்லையா என்கிறார் ஈஸ்வரி.
அது வேற பாட்டி. இங்கே ராதிகா அப்பாவ கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்காங்க. அவங்க டிவோர்ஸ் கொடுக்க எப்படி சம்மதிப்பாங்க என்கிறார். எல்லாம் நடக்கும். நான் சொன்னா சீக்கிரமா அது பழிக்கும் என ஈஸ்வரி அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.
பிறகு இனியா கோபியிடம் காலேஜ் பங்க்ஷன் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். பீஸ் கட்டணும் என கோபியிடம் கேட்க பாக்கியா தான் தருவதாக கூறிவிடுகிறார். கோபி நான் டிரஸ் எடுத்து தருவதாக சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் மயூ வந்து கோபியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
டிராயிங் காம்படிஷனில் வெற்றி பெற்றதாக கூறுகிறார். கோபி உனக்கு என்ன கிப்ட் வேணும் எனக் கேட்கிறார். மயு தனக்கு சின்ன பவுச் மட்டும் போதும் என கூறி விடுகிறார். இதை பார்த்து இனியா மற்றும் ஈஸ்வரி கோபமடைகின்றனர். கோபி டிரஸ் மாற்ற ரூமிற்கு செல்கிறார்.
அந்த நேரத்தில் மயூவை ஈஸ்வரி உங்க அம்மாவால தான் அவனுக்கு இவ்வளவு உடம்பு சரியில்லாமல் போச்சு. உனக்காக அவன் வெளியில் சுத்தணுமா? உனக்கு அவன் டாடி கிடையாது. ஒரு குடிகாரன் இருப்பான் அவன் தான். இனியா, எழில், செழியனுக்கு தான் அவன் அப்பா என்கிறார்.
ஈஸ்வரி பேசுவதை ராதிகா கேட்டு விடுகிறார். மயூ ராதிகாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுக உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேட்க வேண்டியது தானே எனக்கூறி மயூவை அழைத்து சென்று விடுகிறார். கோபி வந்தவுடன் ஈஸ்வரி பேச்சை மாற்றி பேசி விடுகிறார். இதைக் கேட்டு பாக்கியா கோபம் கொள்கிறார்.
இனியாவை அழைத்துக் கொண்டு கோபி வெளியில் செல்கிறார். ராதிகா மயூவை அழைத்து வந்து சமாதானம் செய்கிறார். பின்னர் ரூமில் கோபியுடன் ராதிகா பேசிக்கொண்டு இருக்கிறார்.