அடடா… ஈஸ்வரிக்கும் வாய் அடங்காது… பாக்கியாவும் திருந்த மாட்டாங்க… ஒரே உருட்டா இருக்கே!..
Bakkiyalakshmi: பாக்கியா மற்றும் கோபி இருவரும் நீதிமன்ற கூண்டில் நிற்க கோபியின் வக்கீல் பேச தொடங்குகிறார். அவரை இடை மறித்த பாக்கியாவின் வக்கீல் கேஸை வாபஸ் வாங்கி கொள்ள இருப்பதாக அறிவித்து விடுகிறார். இதைக் கேட்டு கோபி மற்றும் ராதிகா இருவரும் சந்தோஷம் அடைகின்றனர்.
இதில் கடுப்பான நீதிபதி நீங்களே முடிவு செய்வதற்கு கோர்ட்டிற்கு எதற்கு வந்தீங்க. பாக்கியா மன்னிச்சுக்கோங்க இது எங்க குடும்ப விஷயம் எனக் கூறுகிறார். பர்சனல் விஷயத்தால் கெட்டுப்போன கறியை கலந்தாரா? இல்ல நீங்க அவர் மீது பொய் வழக்கு கொடுத்தீங்களா? எனக் கேட்கிறார்.
பாக்கியா மீண்டும் அமைதியாக இருக்க இதற்காக உங்களுக்கு அபராதம் கூட போட முடியும் என நீதிபதி கூறுகிறார். தொடர்ந்து பாக்கியா மன்னிப்பு கேட்கிறார். பாக்கியா யோசித்து பார்க்க எழிலிடம் நேற்றே கேஸை வாபஸ் செய்ய இருப்பதாக கூறுகிறார். அத்தைக்காகவும், இனியாவிற்காகவும் தான் செய்வதாக கூறுகிறார்.
இதை தொடர்ந்து எல்லாரும் வீட்டிற்கு வருகின்றனர். ஈஸ்வரி என்ன ஆச்சு எனக் கேட்க பாக்கியா வாபஸ் வாங்கிய விஷயத்தை சொல்கிறார். இருந்தும் ஈஸ்வரி என் பையனை எதுக்கு இவ்வளோ அலைய வச்சிருக்க என மீண்டும் திட்டிக்கொண்டு இருக்கிறார்.
கோபி பாக்கியா எனக்காக பெரிய விஷயம் செஞ்சிருக்கா. நீங்க அவளை பாராட்டுனாலும் பரவால்ல. திட்டாம இருங்க எனக் கூறுகிறார். பாக்கியாவிடம் கோபி நன்றி சொல்கிறார். இருந்தும் பாக்கியா எதுவும் பேசாமல் நகர்ந்து செல்கிறார்.
ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க ஈஸ்வரி பேசுவதற்கு பாக்கியா அமைதியாக போவது குறித்து ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியா அவங்க கோபம் பட்டாலும் உள்ளுக்குள்ள ஒரு நல்ல மனசு இருக்கு என்கிறார்.
இதை ஒளிந்திருந்து கேட்கும் ஈஸ்வரி பாக்கியா குறித்து மகிழ்ச்சி அடைகிறார். ராதிகா மேல் கடுப்பாக அவரிடம் வந்து பாக்கியாவை எதுக்கு ஏற்றி விடுற எனக் கேட்கிறார். நான் உண்மையை தானே பேசுனேன். நானா இருந்து இருந்தா உங்க கொட்டத்தை என்னைக்கோ அடக்கி இருப்பேன் என கூறுகிறார்.