பிக்பாஸ் திருவிழா… தமிழ் மட்டுமல்ல இந்த முற இதுவும் ஸ்பெஷலாம்!
எத்தனை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்தாலும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்பு எந்த நிகழ்ச்சியாலும் தொட முடியாத வகையில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் டீம் ஒரு புது முயற்சியை கையாள தொடங்கி இருக்கிறது.
தமிழில் இதுவரை 9 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இருக்கிறது. முதல் சீசனை கமல்ஹாசன் தொடங்கிய ஏழு சீசன் வரை நடத்தி வந்தார். தன்னுடைய படவேலைகளால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்தார்.
கடந்த இரண்டு சீசன்களாக விஜய் சேதுபதியின் வித்தியாசமான கவுண்டர்களால் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறது. அந்த வகையில் 10வது சீசனுக்கான நேரம் நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சியின் நடத்தப்படலாம்.
பொதுவாக தமிழ் மற்றும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஒரே நேரத்தில் தொடங்கி முன் பின்னாக முடியும். ஆனால் இந்த முறை அதுபோல அல்லாமல் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி மற்றும் பெங்காலி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் ஒரே நேரத்தில் எல்லா மொழி நிகழ்ச்சிகளும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புது முயற்சியாக பெங்காலி பிக் பாஸை பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
