பிக்பாஸில் இனி இதுவும் சாத்தியம்… இந்த விஷயம் கேட்டீங்களா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இந்த வருட அக்டோபரில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
azhage azhagu

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 10 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதில் நடக்க இருக்கும் ஒரு மாற்றம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நாயகனான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தொடங்கப்பட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் முதல் நிகழ்ச்சி. ஆரம்பத்திலிருந்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பது சீசன் வரை முடிந்திருக்கிறது.

 16க்கும் அதிகமான செலிப்ரிட்டிகள் ஒரே வீட்டில் எந்தவித வெளியே உலக தொடர்பும் இல்லாமல் 60 கேமராக்கள் முன்னால் அமர வைக்கப்படுவார்கள். அவர்களுடைய கோபம் காதல் சண்டை என எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் காட்டி வெற்றி அடைந்தது இந்த நிகழ்ச்சி.

 பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் சீரியல் நட்சத்திரங்களோ சினிமா நட்சத்திரங்களோ தான் இதுவரை கலந்து கொண்டு வந்தனர். கடந்த இரண்டு சீசன்களாக தான் பொது வெளியில் இருந்து வரும் சாமானியர்கள் நிகழ்ச்சிக்குள் வந்தனர்.

ஆனால் அவர்களும் ஏதோ ஒரு வகையில் சினிமாவிற்கு சம்பந்தப்பட்ட ஆட்களாக தான் இருப்பார்கள். பொதுவெளியில் குறைவாக தலைகாட்டி இருப்பார்கள் என்பது மட்டுமே வித்தியாசமாக அமைந்தது. ஆனால் தற்போது இந்த முறை அதில் ஒரு மாற்றம் நடக்க இருக்கிறது.

 பிக் பாஸ் தமிழ் சீசன் பத்து நிகழ்ச்சியில் சாமானியர் ஒருவர் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் யாராக இருக்கும் எப்படி அவரை தேர்வு செய்வார்கள் என ரசிகர்கள் குழம்பவே வேண்டாம். அதற்காகவே பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளராக வரும் டைட்டில் வின்னர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல இருக்கிறார். பெரும்பாலும் வரும் சாமானியர்கள் பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாமல் உள்ளே வருவார்கள்.

 ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சியில் வெற்றியாளராக உள்ளே ஒருவர் வந்தால் அவருக்கு ஏற்கனவே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இது மற்ற செலிபிரிட்டிகளுக்கு பெரிய அளவில் மைனஸ் ஆகவும் பார்க்கப்படலாம். இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரியும். இது குறித்தான அடுத்த கட்ட அப்டேட்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web