BB Tamil 9: பிரபல நடிகருடன் நடக்க இருந்த திருமணம்! யார் இந்த பிக்பாஸ் புகழ் திவ்யா கணேஷ்?
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9ல் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் திவ்யா கணேஷ். இந்த வார கேப்டனாகவும் அவர் பதவி வகித்து வருகிறார். அவருடன் பிரஜன், சான்ட்ரா மற்றும் பார்கவ் ஆகியோரும் போட்டியாளராக களமிறங்கி இருந்தனர். உள்ளே வந்த அந்த நான்கு புது போட்டியாளர்களுக்கும் ஏற்கனவே இருந்த பழைய போட்டியாளர்களுக்கும் இடையே ஆரம்பத்தில் பலவித முரண்பாடுகள் இருந்தன.
அதுவும் திவ்யா கணேஷ் அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் கண்டிப்புடனே நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுவும் கேப்டன் பதவியேற்றதும் அவருடைய நடவடிக்கை மிகவும் திமிருத்தனமாக இருப்பதாகவும் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்கள் தங்களுக்குள்ளேயே பேசி வருகின்றனர். இதற்கிடையில் திவ்யா கணேஷ் பற்றிய ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகின்றன.
திவ்யா கணேஷுக்கு ஏற்கனவே பிரபல நடிகர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து அந்த திருமணம் பாதியிலேயே நின்று போயிருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்பதும் அந்த நடிகர் யார் என்பது பற்றியும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை .பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கே சுரேஷின் தயாரிப்பு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் தான் திவ்யா கணேஷ்.அதுமட்டுமில்ல ஆர்கே சுரேஷின் உறவினர்தானாம். இருவருமே ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அதன் பிறகு தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் முரண்பாடுகள் நிறையவே இருப்பதாகவும் அதனால் நாங்கள் பிரிந்து விட்டோம் என்றும் அப்போது திவ்யா கணேஷ் பேட்டியில் கூறியிருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே சினிமா பைனான்சியர் மது என்பவரை ஆர்கே சுரேஷ் திருமணம் செய்து கொண்டு இப்போது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

ஆர்கே சுரேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை ஆர் கே சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தனது முன்னாள் மனைவியிடம் இருந்து ஆர்கே சுரேஷ் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தன் மகனை மட்டும் அவ்வப்போது சந்தித்து வருவதாகவும் தெரிகிறது. ஒருவேளை இந்த தகவல் தெரிந்தவுடன் தான் திவ்யா கணேஷ் ஆர் கே சுரேஷிடமிருந்து பிரிந்து விட்டாரோ என்றும் கூறப்படுகிறது. இது அப்போதைய நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டாலும் திவ்யா கணேஷ் பிக்பாஸில் ரசிகர்களை கவனம் ஈர்த்து வருவதால் அவருடைய பர்ஷனல் பற்றி இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
