Biggboss Tamil: உள்ளே வரும் குடும்பங்கள்… இதுலையாச்சும் எதும் தேறுமா?
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் அண்ட் ரிலீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு இருக்கிறது.
உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் குடும்பங்கள் இந்த வாரம் முழுவதும் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து செல்வது வழக்கமாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. இது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற ஒரு டாஸ்க்.
அது மட்டுமல்லாமல் இந்த டாஸ்கில் கடந்த சில சீசன்களாக பெரிய அளவில் கன்டென்ட்கள் கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் லோஸ்லியாவை காண அவருடைய அப்பா உள்ளே வந்து அவரினை கிழிகிழியென கிழித்தார்.
தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஷிவானி நாராயணனின் அம்மா உள்ளே வந்திருந்தார். இப்படி ஒவ்வொரு சீசனிலும் குடும்ப நண்பர்கள் உள்ளே வரும்போது ரசிகர்களுக்கு ரசிக்கும்படியான கண்டெண்டுகள் கிடைப்பது வழக்கமாக இருக்கிறது.
அந்த வகையில் ஏற்கனவே டல்லடித்து வரும் பிக் பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் குடும்ப சுற்று நடத்தப்பட இருக்கிறது. பெரும்பாலும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்தர், ரஞ்சித் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இதனால் பெரிய அளவில் போட்டியாளர்களின் குடும்பத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் மூன்றாவது சீசன் போல குடும்பங்கள் உள்ளே வந்து ஏதும் சண்டை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த வாரம் குடும்ப சுற்று நடத்தப்பட இருக்கிறது. முதல் நாளான நாளை சீரியல் நடிகர் தீபக்கின் மனைவி மற்றும் மகன், பேச்சாளர் மஞ்சரியின்கணவர் மற்றும் மகன், ராயனின் அப்பா அம்மா மற்றும் விஜே விஷாலின் அம்மா மற்றும் சர்ப்ரைஸாக ஒரு ஆள் உள்ளே சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் சமீபத்தில் அடிபட்ட ரானவின் பெற்றோர்கள் உள்ளே வந்த எதுவும் கன்டென்ட் தேறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கள் மகனை யாரும் சரியாக நடத்தவில்லை என்ன சமீபத்திய பேட்டிகளில் அவர்கள் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனால் இந்த சுற்றில் அவர்கள் உள்ளே சென்று எதுவும் கலவரம் நடக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: தியேட்டரே பத்திக்கிச்சு.. அதுல அடுத்த ஆட்டமா? புஷ்பா2 ஓடிடி ரிலீஸ் அப்டேட்…