மக்கள் வோட்டில் டாப்…  ஆனாலும் வெளியேறிய லட்சுமி பிரியா… இனி என்ன நடக்கும்?

 

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 சூடுபிடித்து வரும் நிலையில் டைட்டில் அடிப்பார் என்ற கணிப்பில் இருந்த லட்சுமி பிரியா காலையிலேயே வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

கடந்த சில சீசன்களாக டல்லடித்து வந்தது பிக்பாஸ் தமிழ். அந்த பிரச்சனையை சரி செய்ய ஆரம்பம் முதலே சூடு பிடிக்க வைக்க மேடையிலேயே எலிமினேசனை வைத்து கலகலப்பாக்கினார். அப்படி வீட்டில் வந்த போட்டியாளர்கள் மக்களின் ஆதரவோட உள்ளே வந்தனர். 

ஆரம்பம் முதலிலே மக்கள் ஓட்டு மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் தலைவராக இருப்பவர் மூலம் ஒருவரும் வெளியேற்றப்பட்டு வருகிறார். அந்த வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்கை வைத்து தலைவர் தரும் மூவர் பட்டியலில் இருந்து ஒருவரை போட்டியாளர்கள் வோட் செய்து வெளியேற்றி இருக்கின்றனர். 

அந்த வகையில் இந்த வாரம் லீடர் எவிக்ட் லிஸ்ட்டில் ஆனந்தி, முத்தழகி மற்றும் லட்சுமி பிரியா இருந்தனர். இதில் பிரச்சனையாக சென்று கொண்டு இருக்கும் ஆனந்தியையே போட்டியாளர்கள் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்தனர். 

ஆனால் எதிர்பாராத வகையில் மக்கள் ஆதரவுடன் வோட்டிங்கில் டாப்பில் இருக்கும் லட்சுமி பிரியா 7 வோட்டுகளுடன் வெளியேறி இருக்கிறார். இவர் மீண்டும் 8வது வாரத்தில் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், பத்தாவது சீசனை இதுவரை பலரால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதால் மீண்டும் லட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. 

From Around the web