Connect with us

Bigg Boss

ஜோடியாக திருவண்ணாமலைக்குப் போன பிக் பாஸ் பிரபலங்கள்!.. பூர்ணிமா ரவி யாரு கூட போயிருக்காரு பாருங்க!

சில நாட்களாக பிரபலங்கள் தொடர்ந்து திருப்பதி மற்றும் திருவண்ணாமலை கோவில்களை தரிசத்து வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலங்களான நிக்‌ஷன் மற்றும் பூர்ணிமா இருவரும் ஜோடியாக சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

நிக்‌ஷன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இல் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் அந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். நிக்‌ஷன் அந்த சீசனில் பிரபலமான போட்டியாளராக இருந்தாலும் பிக் பாஸ் டைட்டிலை அர்ச்சனா ரவிச்சந்திரன் அள்ளிக் கொண்டு போனார்.

நிக்ஷன் பொதுவாகவே ஒரு ராப் பாடகர், அவரது பாடல்கள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக அவரது பைத்தியக்காரன் , வேற மாதிரி போன்ற பல பாடல்கள் இளைய தலைமுறையினர்களிடையே பரவலாக கவரப்பட்டது. மேலும், நிக்‌ஷன் சில தமிழ் திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் பங்களித்துள்ளார்.

நடிகை பூர்ணிமா ரவியும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்றார். பூர்ணிமா அந்த சீசனில் மோதல்களை பொறுமையாக தீர்க்கும் திறனுக்காகவும், நிகழ்ச்சியில் தனித்துவமான ஆளுமைக்காகவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டார். மேலும், அவருடன் பங்கேற்ற மாயாவுடன் இருந்த பழக்கத்தால் நெகட்டிவான விமர்சனங்களையும் பெற்றார். இவர் அந்த நிகழ்ச்சியில் 16 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

பூர்ணிமா தனது யூடியூப் சேனலான ”ஆரத்தி” மூலம் அறியப்பட்டார். மேலும், “பிளான் பண்ணி பண்ணனும்” என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். பூர்ணிமா ரவி தனது யூடியூப் சேனல் மூலம் பலரை ஈர்த்தவர். இவரது நகைச்சுவை உணர்வும், இயல்பான பேச்சும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இன்று நிக்‌ஷன் மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் ஜோடியாக சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் நண்பர்களாக மட்டும் பழகி வருகிறார்களா? அல்லது காதலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திடீர் கோயில் விசிட்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top