Connect with us

Bigg Boss

முதல் பலியோட காவு வாங்குறதை நிறுத்தப் போறதில்லை!.. முதல் வாரம் யாரெல்லாம் பிக் பாஸில் நாமினேட்?..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் நாளிலேயே எவிக்‌ஷன் நடைபெற்ற நிலையில், முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாமினேஷன் நடைபெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பத்திலேயே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது நபராக உள்ளே நுழைந்த மகாராஜா பட நடிகை சாச்சனா 24 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது தான்.

பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சீரியல் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பிரபலமானவர்கள் பலர் தாங்கள் மீண்டும் பிரபலமாக வேண்டும் என சுயநலத்துடன் கலந்து கொண்டுள்ள நிலையில், இளம் நடிகை சாச்சனா தனது அம்மாவின் கனவுக்காக பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில் ஒரே நாளில் திரும்பி போனது இந்த சீசன் பிக் பாஸும் மோசமாக போகப்போகிறது என ரசிகர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் முதல் வார எலிமினேஷன் நடக்காது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அதெல்லாம் கிடையாது இந்த வாரமும் எலிமினேஷன் உறுதி என்பதை பிக் பாஸ் உணர்த்தி உள்ளார்.

சாச்சனா வெளியேற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற நாமினேஷன் பிராசஸில் ஆறு பேர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் அதிக வாக்குகளை பெற்று நாமினேட் ஆகி இருப்பது தயாரிப்பாளர் ஃபேட்மேன் தான். அவரைத் தொடர்ந்து விஜய் டிவியின் தொகுப்பாளினியான ஜாக்குலின், நடிகர் ரஞ்சித், பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத், சௌந்தர்யா மற்றும் முத்து உள்ளிட்ட ஆறு பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது ரவீந்திரன் என பலரும் கருதி வருகின்றனர். மக்கள் யாரை புதிய விரும்புகிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Bigg Boss

To Top