டாப் ஹிட் படங்களை காப்பி அடிக்கும் விஜய் சீரியல்.. சின்ன மருமகள் லிஸ்ட்டில் இந்த வாரம்…
சீரியல் டிஅர்பி லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்து இருக்கும் சின்ன மருமகள் சீரியலில் அடிக்கடி டாப் படங்களை அப்படியே காப்பி அடித்து கதையாக எடுப்பது வழக்கமாக இருந்தது. அப்படி இந்த வார படம் என்ன தெரியுமா?
நவீன் மற்றும் ஸ்வேதா நடிப்பில் உருவாகி வரும் சீரியல் சின்ன மருமகள். இந்த சீரியலில் படித்துக்கொண்டு இருந்த ஸ்வேதாவை அந்த ஊர் பெரியவர் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கின்றனர். ஆனால் ஹீரோயினுக்கோ மருத்துவம் படிக்க ஆசை.
தேர்வு எழுதிவிட்டு படிக்க தொடங்கிய நேரம் அவர் கர்ப்பமாகிறார். இதில் அடிக்கடி மாமியார் வீட்டுக்கும் போக அங்கு பிரச்சனையில் இவர் பெயர் அடிப்பட வீட்டை விட்டு வெளியேற என ஒரே கதையை உருட்டி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கிறது. ஆனால் அது டாக்டர் செக்கப் சமயத்தில் தெரியாமல் எப்படி என்ற லாஜிக்கே புரியவில்லை. பின்னர் ஒரு குழந்தையை ஒரு பாட்டி பையில் வைத்து எடுத்து செல்கிறார்.
சமீபத்தில் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தினை அப்பட்டமாக காப்பி அடித்து எடுத்து இருக்கின்றனர். இப்படி அடிக்கடி டாப் படங்களை காப்பி அடிப்பதற்கு இந்த சீரியலுக்கு மூடு விழா கட்டினால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
