கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை நடிகர் கேபிஒய் பாலா சமூக சேவைகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் தற்போது வியாசர்பாடி பகுதியில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மளிகை பொருட்களும், தலா 5000 ரூபாயும் வழங்கி உதவி செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பயணத்தை தொடங்கிய பாலா, 2017ஆம் ஆண்டு அதில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இவரை “கேபிஒய் பாலா” என்ற புனைப்பெயருடன் அழைக்கின்றனர். சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2K கிட்ஸ், அது இது எது போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலக்கியுள்ளார்.
மேலும், விஜய் சேதுபதி நடித்த “ஜுங்கா” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர் தும்பா, காக்டெயில், பிரண்ட்ஷிப், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், ரன் பேபி ரன், புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர், விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி முதல் மூன்று சீசன்களில் கோமாளியாகப் பங்கேற்று மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
சமூக சேவைகளின் மீது ஆர்வம் செலுத்தி வரும் பாலா தனது சொந்த வருமானத்தில் இருந்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். குறிப்பாக, கடம்பூர் மற்றும் வாணியம்பாடி கிராமங்களில் ஆம்புலன்ஸ் வசதி அளித்துள்ளார், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். நடிகர் ராகாவா லாரன்ஸுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்துள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வி என பல உதவிகளை செய்து மதர் தெரசா அறக்கட்டளையால் இளம் கலைஞர் விருதும் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் வியாசர்பாடி பகுதியில் நடந்த தீ விபத்தினால் வீட்டை இழந்த அவதிப்பட்ட மக்களுக்கு மளிகைப் பொருட்களும், தலா 5000 ரூபாயும் வழங்கி தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவும் அவரது செயலை பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். புதிய படம் ஒன்றில் ஹீரோவாகவும் பாலா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…