குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் இரண்டாவது எலிமினேஷன் இவர்தானா? சுந்தரி அக்காவால் நடந்த ட்விஸ்ட்…

Cookwithcomali6: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் சூப்பர்ஹிட் அடித்த குக் வித் கோமாளியின் ஆறாவது சீசனின் இரண்டாவது எலிமினேஷன் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சியில் வித்தியாசமான ரூட் பிடித்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. ஒரு சமையல் நிகழ்ச்சியில் கோமாளி என்ற கான்செப்ட்டை இறக்கி காமெடியாக மாற்றி இருக்கின்றனர்.
அந்த வகையில் வெளியான முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சி வெற்றி ரூட் பிடித்தது. தொடர்ச்சியாக இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதிலும் நடுவர்களுக்கு கூட ரசிகர்கள் அமைந்தனர்.
தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் வெற்றி நடைபோட்டது. ஐந்தாவது சீசன் தொடங்கப்பட இருந்த நிலையில் நடுவரான வெங்கடேஷ் பட் வெளியேறினார். இது நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் மைனஸாக அமைந்தது. தெரியாத முகங்கள் பலர் உள்ளே வர ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
ஒவ்வொரு எபிசோட்களிலும் கோமாளிகள் புதிதாக வந்தது கூட பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் காமெடியாக இருந்த நிகழ்ச்சியில் வன்மத்துடன் பேசுவது பலருக்கு கடுப்பை ஏற்படுத்தி கொண்டு இருந்தது.

இத்தகைய மைனஸ் பாயிண்ட்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஓரளவு பழைய ரூட்டை பிடித்து இருக்கிறது. ராஜு, பிரியா ராமன், ஷபானா, சுந்தரி அக்கா, உமர் உள்ளிட்ட குக்குகள் ரசிகர்களின் பேவரிட்டாகி இருக்கின்றனர்.
இந்நிலையில் முதல் எலிமினேஷனில் யூட்யூப் பிரபலம் சவுந்தர்யா சில்லுகரி வெளியேறினார். இதை தொடர்ந்து அடுத்த எலிமினேஷனாக நடிகர் கஞ்சா கருப்பு வெளியேறி இருக்கிறார். இவரும் சுந்தரி அக்காவும் டேஞ்சர் ஜோனில் இருந்தனர்.
ஆனால் செஃபின் டிஷ்களை மறு உருவாக்கம் செய்த எபிசோட்டில் சுந்தரி அக்கா செஃப் ஆஃப் தி வீக் பட்டத்தை தட்டி டேஞ்சர் ஜோனில் இருந்து வெளியேறினார். அதனால் தனி ஆளாக இருந்த கஞ்சா கருப்பு நேரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.