குக் வித் கோமாளி சீசன் 7ல் இந்த வாரம் களமிறங்கும் புது பிரபலம்… அதிரடி அப்டேட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 இந்த வார எபிசோட் சீனியர் vs ஜூனியர் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது. முதல் சீசன் ஆரவாரம் இல்லாமல் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த சீசன் பரபரப்பானது.
ஆனால் நான்கு சீசன்கள் பாசிட்டிவ் ரூட்டில் சென்றது. ஐந்தாவது சீசனில் இருந்தே பிரச்சனையாக ஆரம்பித்தது. முதலில் தயாரிப்பு நிறுவனம், நடுவரான வெங்கடேஷ் பட்டும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளே வந்தார்.
இதையடுத்து, தற்போதைய சீசனில் மேட் செஃப் கெளஷிக், நடிகை ரோஜா என நடுவர் கூட்டமே அதிகரித்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த முறை கணவன் மனைவியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். இதில் விஜய் பிரபலங்களுடன் சில முகம் தெரியாத பிரபலங்களும் எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
சில வாரங்கள் கடந்து இருக்கும் நிலையில் பிரபல காமெடி நடிகை நிஷா, யூட்யூப் புகழ் ஆமாவா சாந்தா எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வகையில் இந்த வாரம் சீனியர் vs ஜூனியர் போட்டி நடக்க இருக்கிறது.
இதில் கடந்த சீசன் உமைர், ராஜூ, ஷபானா, மதுமிதா கலந்துக்கொள்ள இருக்கின்றனர். பொதுவாகவே ராஜூ கலந்துக்கொண்டால் போட்டி சுவாரஸ்யமாகும். அந்த வகையில் இந்த வார குக் வித் கோமாளி கலைக்கட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
