சீரியல் இல்லன்னா என்ன!.. இது போதுமே.. மேரேஜ் பிசினஸில் கல்லாகட்டும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை...!
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களும், சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் நடிப்பை தாண்டி தங்களுக்கு என்று ஒரு தொழிலை தொடங்கி அதில் முதலீடு செய்து வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போகும் போது நாம் யாரையும் நம்பி இருக்க கூடாது என்பதற்காக தான். சினிமாவை பொருத்தவரை எப்போது வாய்ப்பு கிடைக்கும் எப்போது போகும் என்பது தெரியாது.
இதனால் ஒரு தொழிலை கையில் வைத்துக் கொண்டால் நாம் தப்பித்து விடலாம் என்பது தான் உண்மை. அப்படி சீரியல் நடிகை ஒருவர் திருமண மண்டபம் கட்டி அதன் மூலம் சம்பாதித்து வருகின்றார். அவர் வேறு யாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை தான். சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் எழுதிய இயக்கியிருந்த இந்த சீரியல் சக்கபோடு போட்டு வந்தது. இந்த சீரியலை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த நேரத்தில் டிஆர்பி-யில் முழுக்க முழுக்க நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் மட்டும் தான் இருக்கும்.
அதற்கு காரணம் அந்த சீரியலில் நடித்த நடிகர்களின் எதார்த்தமான நடிப்பும், சீரியல் கதையின் விறுவிறுப்பான கதைக்களமும் தான். அதிலும் கரிகாலன் ஆதிரை காம்போ பலரையும் சிரிக்க வைத்தது. அப்படி எதிர்நீச்சல் சீரியலில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட ஆதிரை என்பவரின் நிஜ பெயர் சத்யா தேவராஜன். தற்போது சொந்தமாக பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கின்றார்.
அதாவது மிகப் பிரம்மாண்டமாக திருமண மண்டபம் ஒன்றை கட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் நடத்தி இருக்கின்றார். தனது கணவருடன் கிரகப்பிரவேசத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். அந்த திருமண மண்டபத்திற்கு வெங்கடாஜலபதி பேலஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திருமணம் மண்டபம் படு பிரம்மாண்டமாக இருக்கின்றது. மிகப்பெரிய பரப்பளவில் மண்டபம் கட்டப்பட்டிருக்கின்றன. அவரின் புதிய பிசினஸுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.