கல்யாணத்தை நிறுத்தும் ஜனனி? மெகா TWIST உடன் தொடரும் எதிர்நீச்சல்!

 
கல்யாணத்தை நிறுத்தும் ஜனனி? மெகா TWIST உடன் தொடரும் எதிர்நீச்சல்!

ஹிட் சீரியல் எதிர்நீச்சல்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த மக்களின் மனதையும் கொள்ளையடித்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி தொடர்ந்து பிரபலமான தொலைக்காட்சி தொடராக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.

கல்யாணத்தை நிறுத்தும் ஜனனி? மெகா TWIST உடன் தொடரும் எதிர்நீச்சல்!

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜி மாரிமுத்து அவர்களின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகினார்கள்.

இப்படி இருந்த சமயத்தில் தான் திடீரென அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி ரசிகர்களால் இன்று வரை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மாரிமுத்து:

அவருக்காகவே அந்த சீரியலை பார்க்க கூட்டம் இப்போது வரை இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். இதனால் சீரியலின் மவுசும் குறைந்த பாடில்லை. இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோவில் பயங்கர திருப்பங்களுடன் தொடர் மீதான விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்யாணத்தை நிறுத்தும் ஜனனி? மெகா TWIST உடன் தொடரும் எதிர்நீச்சல்!

பயங்கர திருப்பங்களுடன்:

அதாவது குணசேகரன் ஈஸ்வரி வழக்கில் இருந்து தப்பிக்க மொத்தமாக மாறி நாடகமாடி வருகிறார். மிகவும் நல்லவர் போல் நாடகமாடி குணசேகரன் அவரை தன் வழிக்கு கொண்டு வந்து விட்டார். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருப்பதே அந்த ஒரு வீடியோ தான்.

ஆனால் அந்த வீடியோ இதுவரை ஜனனியிடம் கிடைக்கவில்லை. இப்படியான சமயத்தில் கல்யாணத்தை காரணமாக சொல்லக்கூடாது எனக்கூறி கல்யாணத்தையும் நான் தள்ளி வைக்கிறேன் என கூறுகிறார். இந்த பிரமோ தொடர் மீதான விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறது.

https://youtu.be/xQ9aR33PVoc?si=VZY9tqvW9kXHNxy7

From Around the web