Categories: Cinema News television

Mahanathi: சன் டிவியில் கிடைத்த பெத்த வாய்ப்பு!… விஜய் டிவியின் மகாநதி சீரியலை கழட்டிவிட்ட பிரபல நடிகை?!…

மகாநதி சீரியலில் இருந்து விலகி பிரபல நடிகை ஒருவர் சன் டிவி சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றன. குடும்ப பெண்கள் சன் டிவி மற்றும் விஜய் டிவி போன்றவற்றில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விரும்பி பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: Prabhas: இன்னுமா பிரபாஸ நம்புறீங்க… ஒரே நேரத்தில் மூன்று கொடுத்த பிரபல நிறுவனம்…

சீரியலுக்கு என்று பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய் டிவி. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் போட்டி போட்டுக் கொள்ளும். இதில் பெரும்பாலான இடங்களை சன் டிவி தான் பெற்றிருக்கும். விஜய் டிவியில் மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அதிலும் விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி மற்றும் சிறகடிக்க ஆசை. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. பிரவீன் பென்னட் இயக்கத்தில் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி பிரியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வரும் சீரியல் மகாநதி. மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

இந்த சீரியலில் சுவாமிநாதனின் முன்னாள் காதலி என்கின்ற கதாபாத்திரத்தில் வெண்ணிலா வேடத்தில் நடிக்க கமிட்டானவர் கண்மணி மனோகரன். இவர் ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்த சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழ் பக்கம் சென்ற இவர் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பி இருந்தார்.

வெண்ணிலா கதாபாத்திரத்தில் அவ்வபோது சீரியலில் வந்து செல்லும் இவருக்கு தற்போது சன் டிவியில் ராகவி என்கின்ற தொடரில் ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய் டிவி தொடரிலிருந்து அவர் வெளியேறி இருக்கின்றார். அவருக்கு பதிலாக முத்தழகு சீரியலில் நடித்து வந்த வைஷாலி தணிகா வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதும் சூர்யா-தனுஷ்… இதுல இவங்க வேறயா?!… 2025 சுமார் தாறுமாறா இருக்கப்போது!…

நடிகை கண்மணி மனோகருக்கு சன் டிவியில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கவே விஜய் டிவி சீரியலை கழட்டிவிட்டு சென்றுவிட்டார். சமீபத்தில் தான் இவருக்கு பிரபல தொகுப்பாளரான அஸ்வந்த் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ramya suresh
Published by
ramya suresh