ஹார்ட் பீஸ்ட் சீசன் 3.. வெளியானது இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ஹார்ட் பீட். ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான இந்த தொடருக்கு
Aug 5, 2026, 12:14 IST
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ஹார்ட் பீட். ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. 2024ம் ஆண்டு வெளியான இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 2025ம் ஆண்டு ஹார்ட் பீட் 2ம் பாகம் வெளியானது. இதற்கும் நலல் வரவேற்பு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு அதிகம் என்றே கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இத்தொடரின் 3ம் பாகம் கடந்த ஜூலை 30ம் தேதி வெளியானது. முதல் வாரத்தில் வெளியான எபிசோட்டில் ரீனா, விஜய், ரதி மற்றும் அர்ஜுன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து காட்டியிருந்தனர். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாம் வாரத்திற்கான புரமோ இன்று வெளியானது. இதில் நடிகை காயத்ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.
