
latest news
Biggboss 9: திவாகரை எட்டி உதைத்த விஜே பார்வதி! ‘பிக்பாஸ்’ல என்னங்கடா நடக்குது?
Biggboss 9:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு மிகவும் மனம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி. எட்டு சீசன்களாக மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் எட்டாவது சீசனில் இருந்து விஜய்சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆரம்பத்தில் விஜய்சேதுபதி இதுக்கு செட்டாவாரா என்று அனைவருமே கேள்வி எழுப்பிய நிலையில் நான் போட்டியாளர்களை டீல் பண்ற விதமே வேற என பட்டைய கிளப்பினார் விஜய்சேதுபதி. அசால்ட்டாக அவரது பாணியில் போட்டியாளர்களை வச்சு செய்தார். இந்த சீசனில் வரும் சனிக்கிழமைதான் அவர் முதன் முறையாக போட்டியாளர்களுடன் உரையாடுவார்.
அதனால் இந்த வாரம் யார் யாரெல்லாம் விஜய்சேதுபதியிடம் சிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இதுவரை நடந்த சீசன்களில் இந்த ஒன்பதாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை சம்பாதித்திருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த சீசன் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்ல வேறு எதாவது நடத்துறாங்களா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக பலூன் அக்கா என அழைக்கப்படும் அந்த போட்டியாளரை பற்றி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுவரைக்கும் எல்லா சீசன்களிலும் பிக்பாஸிடம்தான் எல்லா போட்டியாளர்களும் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் முதல் முறையாக இந்த சீசனில் பிக்பாஸ் மாட்டிக் கொண்டார். இதெல்லாம் சரியான பைத்தியங்கள் இல்லை, இல்லை சரி ஆகாத பைத்தியங்கள் என கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்கள் மட்டுமில்ல, யுடியூப் சேனல்களிலும் பல பத்திரிக்கையாளர்களும் இந்த சீசனை பற்றி நெகட்டிவான விமர்சனத்தையே முன் வைத்து வருகின்றனர். எத்தனையோ திறமைசாலிகள் வாய்ப்பில்லாமல் வெளியே இருந்தும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எதுக்கும் ஆகாத இவர்களை எல்லாம் உள்ளே போட்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாள் காலை நேரத்தில் மார்னிங் ஆக்டிவிட்டி என்ற ஒன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும். அதுபற்றிய புரோமோ இன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஏதாவது ஒரு சீனை நடித்துக் காட்ட வேண்டும். அதில் விஜே பார்வதி திமிரு படத்தில் ஒரு காட்சியை ரி கிரியேட் செய்ய அதில் திவாகரின் கன்னத்திலேயே ஓங்கி எட்டி உதைத்தார். அதில் திவாகர் கீழே விழ ஐயோ என பார்வதி திவாகரை தூக்கி விடுகிறார். திவாகரை பார்த்தாலே சில பேருக்கு எரிச்சல்தான் வரும். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரால்தான் கண்டெண்ட்டே கிடைத்துக் கொண்டிருக்கிறது.