Celebrity Master Chef Tamil நிகழ்ச்சியில் வைல்டு கார்டாக களமிறங்கும் ஜூலி!

சோனி தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி Celebrity Master Chef Tamil. இந்த நிகழ்ச்சியில்  நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக  களமிறங்க உள்ளார்
 
 Celebrity Master Chef Tamil

சோனி தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி Celebrity Master Chef Tamil. இந்த நிகழ்ச்சியில்  நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக  களமிறங்க உள்ளார்.   குறைந்த நேரத்தில் உணவுகளை தயார் செய்வது, கடினமான சமையல் சவால்களை எதிர்கொள்வது என இதுவரை சந்திக்காத புதிய அனுபவத்தை ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலம் எதிர்கொள்ள இருக்கிறார்.

இந்தப் போட்டியில் ஜூலியின் வருகையை மேலும் சிறப்பாக்கும் மற்றொரு விஷயமும் உள்ளது.  ஜூலி தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அதே நேரத்தில் நிகழ்ச்சியின் நடுவரான சமந்தாவும் தாய்மையை எதிர்நோக்கியுள்ள நிலையில் , இருவருக்கும் இடையே இயல்பாகவே ஒரு புதிய பிணைப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உணவு ஆசைகள், சுவைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிறிய மகிழ்ச்சிகள் குறித்து இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல்கள் இடம்பெறலாம். இருப்பினும், ஒருவர் போட்டியாளர்; மற்றொருவர் நடுவர் என்பதால் போட்டிக் களத்தில் இவர்களது சந்திப்பு எப்படி இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஜூலி கூறுகையில், தனது வாழ்க்கையின் இந்த முக்கியமான காலகட்டத்தில்  Celebrity Master Chef Tamil நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு மிகவும் சிறப்பான அனுபவம் என்று தெரிவித்துள்ளார். சமந்தாவும் இதே அழகான பயணத்தில் இருப்பதால் தனது உணவு ஆசைகளை புரிந்துகொள்ள ஒருவர் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர்,  சமந்தா நடுவராக இருப்பதால் தனக்கு எளிதாக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை  என்றும் தெரிவித்துள்ளார்.

biggg boss jule

இந்த நிகழ்ச்சியில் சமந்தாவுடன் இணைந்து செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சாஷி மற்றும் செஃப் ஷ்ரேயா அட்கா ஆகியோர் போட்டியாளர்களின் உணவுகளை மதிப்பீடு செய்ய உள்ளனர். வைல்டு கார்டு மூலம் போட்டிக்குள் நுழையும் ஜூலி, குறுகிய காலத்திலேயே மற்ற போட்டியாளர்களுக்கு சவால் அளித்து தனது இடத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
 
இந்த  நிகழ்ச்சியை Sony VIZHA மற்றும் Sony LIV-ல் காணலாம். 

Tags

From Around the web