கருப்பு படத்தில் ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… இத்தன செலிபிரிட்டிகளின் காட்சி காலியா? ​​​​​​​

10 ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு அதிரடி வெற்றி கை கொடுத்து இருக்கிறது. 
 
karuppu

Karuppu: தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் இணைந்து இருப்பது கருப்பு. இப்படத்தில் பல இன்ப்ளூயன்சர்கள் நடித்திருந்தாலும் அவர்கள் காட்சிகள் எதுவுமே திரையில் காணும் என கலகலப்பான ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. 

நடிகர் சூர்யா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி. ஆனால் அவருக்கு கடந்த 10 வருடமாக ஒரு சரியான வெற்றி இல்லாமல் இருக்கிறார். சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற மாஸ் படங்களை கொடுத்தாலும் அது ஓடிடியில் ரிலீஸானது. 

அதை தொடர்ந்து அவர் பெரிதும் எதிர்பார்த்த கங்குவா கூட சரியாக செல்லவில்லை. இந்நிலையில் அவருடைய நடிப்பில் கருப்பு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்திருந்தனர். ரிலீஸ் சமயத்திலேயே பல சிக்கலை சந்தித்து படம் ரிலீஸாகி பெரிய வெற்றியை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தில் பல இணைய பிரபலங்கள் நடித்ததாக கூறப்பட்டது. அதிலும் முதலாக எண்ட்ரி கொடுத்தவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். இவர் ஒரு சில காட்சிகள் நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அவருடைய காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. 

இதை தொடர்ந்து இன்ஃப்ளூயன்சர் சதீஷ் தீபா கருப்பு படத்தில் நடித்ததாக போட்டோவை வெளியிட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் காட்சிகளும் படத்தில் இடம்பெறவில்லை. இதில் ட்விஸ்ட்டே கேஸ்ட்டிங் டைரக்டர் அருண் அரவிந்த் நிலைமை தான். இருவரும் மொட்டை அடித்தது போல மேக்கப்பெல்லாம் போட்டு இருக்கின்றனர். 

ஆனால் அவர்கள் காட்சிகளும் படத்தில் நீக்கப்பட்டு விட்டது. இப்படி தொடர்ச்சியாக பிரபலங்கள் நடிப்பதாக சொல்வதும் கருப்பு படத்தில் காட்சி இல்லாமல் போவதும் தொடர்கதையாகி இருக்கிறது.



 

From Around the web