டிராகன் பட நடிகைக்கு லிப்-கிஸ் கொடுத்த சிறுவன்!.. எல்லை மீறும் ரியாலிட்டி ஷோ.. அடக்கொடுமையே!..
Saregama: தற்போது தமிழில் நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் குழந்தைகளை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு தற்போது அபாய மணி ஒலிக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழில் டான்ஸ் மற்றும் பாட்டு பாட ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அது போலவே எல்லா தொலைக்காட்சிகளுமே குழந்தைகளுக்கும் ஜூனியர், சாம்ப்ஸ் என்ற பெயரில் அதே நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதில் தொகுப்பாளர்கள் அவர்களிடம் எல்லை மீறி பேசுவதும் அதற்கு அவர்கள் வாய் பேசுவது சில நேரத்தில் ரசிப்பதை போல இருந்தாலும் பல இடங்களில் முகம் சுழிப்பது போலவே இருந்ததாக பல நாட்களாகவே ஒரு விமர்சனம் எழுந்து இருந்தது. தற்போது அதை விட விஷயம் விவாகரமாகி இருக்கிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகம லிட்டில் சாம்ப்ஸ் என்ற பெயரில் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் சமீபத்தில் நடந்த எபிசோட்டில் டிராகன் பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரதீப் ரங்கநாதன், நடிகை கயாடு லோஹர் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இதில் ஒரு சிறுவனுக்கு கயாடு அழைத்து முத்தமிட வர அவர் தன்னுடைய தலையை திருப்பி லிப் கிஸ் வாங்கி இருக்கிறார். மேலும் இதை பார்த்த நடுவர் எஸ்.பி.பி சரணே சிரிப்பதா என்ற குழப்பத்தில் அதிர்ந்து பார்த்து இருக்கிறார். இதை அங்கிருந்தவர்கள் சாதாரணமா கையாண்டு இருக்கின்றனர்.
இப்படி ஒரு நிகழ்வை சரியென எபிசோட்டில் ஒளிபரப்பிய டிவி நிர்வாகத்தினை ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட காட்சிகளை இணைப்பது அது பல பேருக்கு முரண்பாடாக அமையும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.