முன்னலாம் உள்ளயே விடமாட்டாங்க!.. இப்ப பாருங்க!.. பிளாஷ்பேக் சொல்லும் KPY பாலா!...

by MURUGAN |
kpy bala
X

KPY Bala: காரைக்குடியை சொந்த ஊராக கொண்டவர் பாலா. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அது இது எது என்கிற நிகழ்ச்சியில்தான் இவர் முதலில் கலந்துகொண்டார். அதன்பின் விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

ஒருபக்கம் பல திரைப்படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். கலக்கப்போவது யாரு 6வது சீசனில் இவர் வெற்றியும் பெற்றார். மேலும், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி சீசன் 1, 2, 3, முரட்டு சிங்கிள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். சிறந்த காமெடிக்காக விஜய் டிவி விருதையும் வாங்கியிருக்கிறார்.


இதையெல்லாவற்றையும் விட கஷ்டப்படும் பலருக்கும் பாலா உதவி செய்து வருகிறார். ஆம்புலன் வசதி இல்லாத சில கிராமங்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். மேலும், சின்ன சின்ன வியாபாரிகளுக்கு அவர்களின் வியாபாரத்தை செய்ய வண்டிகள் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, கஷ்டப்படும் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பது என தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் பலரின் பாராட்டையும் அவர் பெற்று வருகிறார்.

எனக்கு ஒரு மாதத்திற்கு ஓட்ட 25 ஆயிரம் ரூபாய் போதும். மற்ற பணத்தில் கஷ்டப்படுவர்களுக்கு உதவி செய்து வருகிறேன் என சொல்கிறர் பாலா. இந்நிலையில், கலைஞர் டிவியில் கலா 40 நிகழ்ச்சியில் பேசிய பாலா ‘2015 விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கேட்டு வரும்போது பக்கத்துல கலைஞர் டிவியோட மானாட மயிலாட போயிட்டு இருக்கும். அங்க வெளிய டான்ஸர்ஸுக்கு சாப்பாடு போடுவாங்க. நான் சாப்பிட போனா செக்யூரிட்டி உள்ளயே விடமாட்டாங்க. இன்னைக்கு செக்யூரிட்டியோட்ச என்னை உள்ள கூட்டிட்டு வரும்போது 10 வருஷம் பின்னாடி போயிட்டு வந்த மாதிரி இருக்கு’ என சொல்லியிருக்கிறார்.

Next Story