மதுரை முத்து பற்றி பிரபல நடிகை பற்ற வைத்த தீ!... பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றிவிட்டாரே?

பல நாட்களாக லைம் லைட்டில் இல்லாத மதுரை முத்துவுக்கு பிரச்சனை பற்ற வைக்கப்பட்டு இருக்கிறது. 
 
madurai muthu

கடந்த சில ஆண்டுகளாகவே பிரபலங்கள் பிரச்சனையில் சிக்குவது வழக்கமாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த முறை காமெடியில் கலக்கிய மதுரை முத்து பிரச்சனை தற்போதைய சமூக வலைத்தளத்தின் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. 

பிரபல தொலைக்காட்சிகளில் காமெடி நடிகராக வலம் வந்தவர் மதுரை முத்து. இவர் பிரபலமாக இருந்த சமயத்தில் அவரின் முதல் மனைவி திடீரென இறந்தார். அவர் மறைந்த சில மாதங்களிலேயே அவருடைய தோழியை இரண்டாம் திருமணம் செய்தார். 

அவர் ஒரு மருத்துவர் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் மதுரை முத்துவுக்கும் இரண்டாம் மனைவிக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் திடீரென அவர் மனைவி சோஷியல் மீடியாவில் என்னுடைய கணவரிடம் இருந்து என்னை பிரிச்சிட்டாங்க. 

அவரிடம் வாங்கி தின்னுட்டு இருக்கவங்களாம். சும்மா இருக்க முடியாதா? என்னை எப்படி பேசுறீங்க? என் புருஷன் கூட என்னை இப்படி பேசியது இல்லை எனக் கடுப்பாகி கத்திவிடுகிறார். இந்த வீடியோ வைரலான நிலையிலும் கூட பெரிதும் இந்த விஷயம் பேசப்படாமலே இருந்தனர். 

இந்நிலையில் நடிகை அம்பிகா பெரியரில் இருக்கும் ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து, மதுரை முத்து விஷயம் குறித்து கேள்விப்பட்டேன்... ப்ளீஸ் அவங்கள அமைதியா விட்டுடுங்க. சமாளிச்சுக்கட்டும். ஏற்கனவே அந்த குடும்பம் கொடுமையான நிலையில் இருக்கு. 

எரியற தீயில எண்ணெயை ஊத்த வேண்டாம். இதை எல்லாரும் தவிர்க்கணும். இதில் நமக்கு உரிமை இல்லை. யாரும் பாதிக்கப்படாமல், நல்ல முடிவு வரணும் என விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இதை தொடர்ந்து பலரும் மதுரை முத்துவுக்கு என்னாச்சு என தேட துவங்கி இருக்கின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு ஒரிஜினல் ஐடியா என்பது குறித்த தகவல் இல்லை. 

From Around the web