முடிவை நெருங்கும் மகாநதி… குட்பை சொல்ல போகும் விஜய் காவேரி!

விஜய் தொலைக்காட்சியின் மகாநதி சீரியல் முடிவை எட்டி இருப்பதற்கு காரணம் இனிமேல் கதை இல்லை என டீம் முடிவெடுத்துவிட்டதாம். 
 
mahanathi

தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் ஹீரோயின் தான் அதிகமான ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் சமீபத்தில் ஹீரோவுக்கு ஹிட் அடிச்ச சீரியல் என்றால் அது மகாநதி தான். அந்த சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்ட் போட போகிறார்கள். 

அப்பா ஆசைக்காக போராடும் மகள். அக்காவின் ஆசைக்காக தங்கையின் காதலுக்காக என பெரிய கஷ்டத்தை தாங்கும் ஹீரோயின் காவேரிக்கு உறுதுணையாக வந்தவர் தான் விஜய். இவர் காண்ட்ராக்ட் கல்யாணம் காவேரி வாழ்க்கையை மாத்தும். 

எல்லாம் சொல்லிக்கொடுத்த விஜய் மேல் காவேரிக்கு காதல் வந்துவிடுகிறது. ஆனால் அதற்குள் இவர்கள் திருமண விவகாரம் வீட்டுக்கு தெரிந்து இருவரையும் பிரித்து விடுகின்றனர். பின்னர் காவேரி கர்ப்பமாகிறார். அப்போதும் பிரச்சனையாகி இருவரும் சேர்ந்து டெலிவரிக்காக காத்திருக்கின்றனர். 

ஆனால் இயக்குனர் இங்கையும் அவருடைய திருவிளையாடலை ஆடி விடுவார். காவேரிக்கும் விஜய்க்கும் விபத்து நடக்க கர்ப்பமாக இருந்த காவேரி மொத்த நியாபகத்தையும் மறந்துவிடுகிறார். குழந்தை விஜயிடம் வளர்கிறது. 

ஆறு ஆண்டுக்கு பின்னர் கதை நகர்ந்து மொத்த ரசிகர்களின் ஆசையிலும் மண் விழுந்து விடுகிறது. ஹீரோ அப்பாவாக ஹீரோயின் மறதியில் தடுமாற பல நாள் கழித்து குழந்தைக்கு உண்மை தெரிகிறது. இன்னும் சில தினங்களில் சின்ன காவேரி அம்மாவிடம் உடைக்க போகிறார். 

இதனால் காவேரியுடன் விஜய் சேரும் நாள் விரைவில் நடக்கும். அதனுடன் எபிசோட் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

From Around the web