வில்லி கேரக்டரில் நடிச்சது ஒரு குத்தமா? பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த விபரீதம்
எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் இந்த சினிமாவில் வந்து சென்றாலும் அதில் குறிப்பிட்ட சில பேரை மட்டும்தான் நம்மால் மறக்காமல் அப்படியே நியாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும். ஒன்று அவர்களின் நடிப்பால் நம்மை அவர்கள் பக்கம் இழுத்திருப்பார்கள். மற்றொன்று அவர்களின் அழகு, தோற்றம் இவற்றால் நம்மை வசீகரித்திருப்பார்கள். இது பெரியதிரைக்கு மட்டுமில்ல. சின்னத்திரைக்கும் தான்.
அப்படி சீரியலில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர்தான் மஞ்சரி. கோலங்கள் சீரியலில் தேவயாணிக்கு தோழியாக ஒரு தைரியமான பெண்மணியாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அடிப்படையில் மஞ்சரி தைரியசாலியான பெண்ணும் கூட. ஆனால் கோலங்கள் சீரியல்தான் இவரை அடையாளம் கண்டது.
அந்த சீரியலில் நடிக்கும் போது பாதியிலேயே சீரியலில் இருந்து விலகினார் மஞ்சரி. அதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருந்ததுதான். அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைத்தும் பலனளிக்க வில்லை. யாரும் மஞ்சரி இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க விரும்பவில்லை. அதனால் மீண்டும் மஞ்சரியே அந்த கேரக்டருக்கு நடிக்க வந்தார்.
அதன் பிறகு அண்ணாமலை சீரியலில் பக்கா வில்லி கேரக்டரில் நடித்து மிகப்பெரிய வெறுப்பை மக்கள் மத்தியில் சம்பாதித்தார் மஞ்சரி. அந்த சீரியலின் தாக்கம் அவருடைய நிஜவாழ்க்கையிலும் பிரதிபலித்தது. ஒரு விழாவிற்கு சென்றிருந்த போது திடீரென பெண்கள் மஞ்சரி மீது சேரை தூக்கி அடித்தார்களாம். தூக்கி வீசினார்களாம்.
திரும்பி பார்த்தால் அவர் மீது வெறுப்பை கக்கி நீ யெல்லாம் இருக்கவே கூடாது என சேரை தூக்கி விசினார்கள் என தற்போது ஒரு பேட்டியில் மஞ்சரி கூறினார். இப்போது மஞ்சரி மொட்டை தலையுடன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். அது கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் நலனுக்காகவெ தானும் மொட்டையுடன் இருப்பதாக மஞ்சரி கூறினார்.
மேலும் இப்போது நடிக்க வாய்ப்பு வந்தாலும் இதே தலையுடன் தான் நடிப்பேன் என்று கண்டீசன் போட்டுத்தான் நடிப்பாராம். மேலும் இப்ப உள்ள சீரியல்கள் எல்லாம் மிகவும் அருவை, ரம்பம் என்றெல்லாம் விமர்சனம் செய்தார் மஞ்சரி. அதுமட்டுமில்லாமல் யாருங்க வீட்ல இருக்கும் போது பட்டுப்புடவை அணிந்தும் நகைகளை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்? இப்ப உள்ள சீரியல்களில் எல்லா நடிகைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். எதார்த்தமே இல்லை என்றும் மஞ்சரி கூறினார்.