இப்ப இல்ல இரண்டு வருசம் முன்னாடியே… மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி அறிக்கை!..

by Akhilan |
இப்ப இல்ல இரண்டு வருசம் முன்னாடியே… மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி அறிக்கை!..
X

Madhampatti Rangaraj: பிரபல சமையல் கலை நிபுணரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மனைவி ஜாயி கிரிஸில்டா இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரசிகர்களிடம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் தன்னுடைய குடும்பத் தொழிலை எடுத்து வெகுவிமரிசையாக நடத்தி வருகிறார்.

தற்போது சினிமா பிரபலங்கள் வீட்டு விசேஷத்திற்கு இவருடைய சமையல்தான் இன்னும் நிலைக்கு மாறியிருக்கிறார். அந்த புகழ் கிடைத்த வரவேற்பால் பிரபல விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளியின் நடுவராகவும் மாறினார்.

இவர் திமுக இளைஞர் அணியை சேர்ந்த வக்கீலான ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் திடீரென மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டது.

அவருடன் இருக்கும் புகைப்படங்களை ஜாய் தொடர்ந்து வெளியிட்டு வைரல் ஆக்கி வந்தார். அந்த நேரத்தில் முதல் மனைவி ஸ்ருதி தான்தான் அவர் மனைவி என்பதை வெளிப்படையாக அறிவித்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்பதை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அடுத்த நாளே தான் ஆறு மாத கர்ப்பம் என்பதையும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால், ஸ்ருதி மூன்று மாதங்களுக்கு முன்னர் ரங்கராஜுடன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்ததால் இன்னும் அவர்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்ற சர்ச்சை பெரிய அளவில் வெடிக்க தொடங்கியது.

அதிகாரப்பூர்வமாக இருவரும் பிரிந்தனரா என்ற கேள்விக்கே இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது மனைவி ஜாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில உறவுகள் ரகசியமாக தொடங்கப்பட்டாலும் நம்பிக்கையால் வளரும்.

அதுபோலவே நானும், ரங்கராஜும் சில ஆண்டுகள் முன்பில் இருந்தே கணவன், மனைவியாக இருக்கிறோம். இந்த வருடம் எங்கள் குழந்தையை வரவேற்க இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில் நீங்க கட்டிக்கிட்டதை கேட்கலை. அவங்க விவாகரத்து செஞ்சாங்களானு தான் கேக்குறோம் எனக் கலாய்த்து வருகின்றனர்.

Next Story