
latest news
Biggboss 9: பிக் பாஸ் சீசன் 9ல் உள்ளே வரும் போட்டியாளர் இவரா? காமெடிக்கு பஞ்சம் இருக்காது
BIggboss 9:
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை இப்போது எல்லா மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்தந்த மொழிகளில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். தமிழில் இந்த நிகழ்ச்சி 8 சீசன்களாக நடந்து முடிந்திருக்கிறது.
இப்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தமிழில் கமல் தொகுத்து வழங்கி வந்தார். எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முன் சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?:
- எந்தவொரு வெளியுலக செய்தியையும் அறிந்து கொள்ளாமல் செல்பேசி, பேப்பர் என பொதுஅறிவும் இல்லாமல் வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்களுடன் மட்டுமே பேசுவது, உரையாடுவது என தனித்துவமான சூழ் நிலையில் இருப்பது,
- வீட்டிற்குள் நடக்கும் பிரச்சினைகள், ஒருவருக்கொருவர் சண்டை போடுவது என நேரடியாக காண்பதால்
- அவர்களுக்கிடையே இருக்கும் மனக்குழப்பம், மோதல்கள் என அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை காண ஆர்வத்தை ஏற்படுத்துதல்
பிக்பாஸ் ஹைலைட்ஸ்:
இவர்கள் எல்லாம் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்களா என்று நாம் நினைத்த நடிகர்கள் இப்போது சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்து விடுகிறார்கள். அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காத உலக நாயகன் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர்களின் பிரபலத்தை பயன்படுத்தி ரசிகர்களும் இதன் மூலமாவது அவரை பார்த்துவிடலாம் என ஆசைப்பட்டார்கள்.
தொகுத்து வழங்கும் போது தனித்துவக்கத்தோடு நிகழ்ச்சியை வழிகாட்டுதல் மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. கமல் வழியில் விஜய் சேதுபதியும் அவருடைய பாணியில் எட்டாவது சீசனை வேற ஒரு வெவலுக்கு எடுத்துச் சென்றார்.
கலந்து கொள்ளும் போட்டியாளர்கள்:

ஒவ்வொரு சீசன் தொடங்கும் போது அந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஹைப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த 9வது சீசனில் பல போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அதில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாக்கியலட்சுமி புகழ் நேகா, உமைர், விஜே பர்வின் என லிஸ்ட் வந்து கொண்டே இருக்கின்றது. இது விஜே ஹெம்மி ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டார் என்று இப்போது தகவல் கிடைத்துள்ளது. இவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து தனது காமெடித்திறமையை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.