OTT: இந்த வார வீக்கெண்ட் ஓடிடியில் என்ன படங்கள் பார்க்கலாம்?
சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் என்ன படஙகள் வெளியாகின்றன என்று நினைத்த காலம் போய் தற்போது ஓடிடியில் என்ன படங்கள் வருகின்றன என பார்க்க துவங்கிவிட்டனர். அந்த அளவிற்கு ஓடிடி ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இந்த வாரம் ஓடிடியில் என்ன பட்ங்கள் வருகின்றன என்பதி இங்கே காண்போம்.

கருப்பு:
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி தியேட்டர்களில் ரூ 325கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட்டான கருப்பு இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. ஒரு ஏழைக் குடும்பத்திற்கு நடக்கும் அநீதியை எதிர்க்க, காவல் தெய்வமான வேட்டை கருப்பு வக்கீல் உருவத்தில் வந்து வாதாடும் ஒரு ஃபேன்டஸி அதிரடித் திரைப்படம் இது. பரபரப்பான திரைக்கதை மற்றும் சாய் அபயங்கரின் இசை ஆகியவை படத்தின் வெற்றிக்கு பலமாக அமைந்தது. இந்த படம அமேசான் பிரைமில் வருகிற 12ம் தேதி ஸ்டீமிங் ஆகிறது.
Sshhh Season 3
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற Sshhh தமிழ் ஆந்தாலஜி வெப் சீரிஸின் 3-வது சீசன் இந்த வாரம் வெளியாகிறது. பூனம் பஜ்வா, கிரண் ரத்தோர், திவ்யா கணேசன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.
பிற மொழி மற்றும் இந்திய வெளியீடுகள் (தமிழ் டப்பிங்குடன்)
திருடம்:
ஷேன் நிகம் நடிப்பில் வெளியான ஒரு க்ரைம் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம். அமைதியான கிராமத்திற்குப் பொறுப்பேற்கும் இளம் போலீஸ் அதிகாரி, அங்கு நடக்கும் தொடர் கொலைகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. பரபரப்பான கதை களத்துடன் வெளியாகும் இந்த படம் JioHotstar ல் ஜூன் 12ல் வெளியாகிறது.
பூத் பங்களா

இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் அக்ஷய் குமார் கூட்டணியில் 14 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள ஒரு ஹாரர்-காமெடி திரைப்படம். இது னெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 12ல் வெளியாகிறது.
இந்த வாரம் வெளியாகும் படங்களில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ஓடிடி தளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
