Pandian Stores2: செந்திலை மட்டம் தட்டும் பாண்டியன்… மாமனார் செய்த திடீர் சம்பவம்… செமையா இருக்கே!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சக்திவேல் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது குமார் சாப்பிட உட்கார அரசியை பரிமாற சொல்கிறார். அவர் சாப்பாட்டை வைக்கும் போது குமார் தட்டை தள்ள சாப்பாடு டேபிளில் விழுந்து விடுகிறது.
இதை பார்த்த குமரவேல் கடுப்பாகி உன்னை எல்லாம் என்ன வளர்த்தாங்க. உனக்கு இது எதுவும் சொல்லி கொடுக்கலையா எனத் திட்டுகிறார். அப்போ குமார் அம்மா வந்து நீ சாப்பிட உட்காரு நான் பாத்துக்கிறேன் என்கிறார். ஆனால் குமரவேல் அப்போ இதை யார் சுத்தம் பண்ணுவா எனக் கேட்க அரசி தானே சுத்தம் செய்து விட்டு செல்கிறார். இதில் கடுப்பாகி அப்பத்தா குமரவேலை திட்டுகிறார். ரூமில் குமரவேல் இருக்க அரசியை பார்த்து உன்னை அசிங்கப்படுத்த சந்தோஷமா இருக்கு என்கிறார்.
அப்போ அரசி குமாரை அடித்து தாலி கயிறை வைத்து குமார் கழுத்தை நெறிக்கிறார். குமார் அலற அரசி அழுத்தி பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் நீ புலி வாலை பிடிச்சி இருக்கணு உனக்கு தோணலையா. ரூமை விட்டு வெளியில் போய் படு என்கிறார்.
குமார் என்ன திமிரா வீட்டில் கேட்டா என்ன சொல்லுறது எனக் கேட்க என் பொண்டாட்டி என்னை துரத்தி விட்டானு போய் சொல்லு என்கிறார். குமாரை வெளியில் தள்ளி கதவை சாத்தி விடுகிறார். சக்திவேல் வர அங்கு அவ கூட படுக்க பிடிக்கலை என்கிறார்.
உடனே சக்திவேல் நான் கூட அந்த பாண்டியன் பொண்ணு சாம்பாரை கொட்டியே உன்னை கொன்னுடுவானு நினைச்சேன். ஆனா நீ திமிரா இருந்து என் பையனு நிரூபிச்சிட்ட என்கிறார். வீட்டில் செந்திலுக்கு கால் செய்து உடனே வர சொல்கிறார் மீனாவின் அப்பா.
என்ன விஷயம் எனச் சொல்லாத காரணத்தால் மீனா மற்றும் செந்தில் பதற்றமாக கிளம்பி செல்கின்றனர். வீட்டில் சொல்லிவிட்டு செல்லாமல் என செந்தில் வர ஆனால் அவருக்கு பாண்டியன் ஒரு வேலை சொல்கிறார். செந்தில் மீனா வீட்டுக்கு போய்ட்டு வரவா எனக் கேட்க இப்போ எதுக்கு போற.
நைட் போகலாமே. இல்ல சாப்பாடு டைமில் போகலாமே என்கிறார். மீனா வந்து அப்பா அவசரமா வரச்சொன்னாரு. அவருக்கு உடம்புக்கு எதுவும் செய்யுதோனு பயமா இருக்கு என்கிறார். உடனே கோமதி நீங்க இரண்டு பேரும் உடனே போய் அப்பாவை பாருங்க. என்ன ஆச்சுனு எனக்கு கால் பண்ணி சொல்லுங்க என்கிறார்.
இரண்டு பேரும் கிளம்பி மீனா வீட்டிற்கு வர மீனா அப்பாவிடம் உங்க உடம்புக்கு எதுவும் இல்லையே அப்பா எனக் கேட்க அவர் அதெல்லாம் இல்ல என்கிறார். வேலை விஷயம் என்ன ஆச்சு எனக் கேட்க மாப்பிள்ளைக்கு பொது பணித்துறைல வேலை போட்டு கொடுத்து இருக்காங்க. போன் வந்ததும் ஆர்டர் வாங்க போகணும் என அதிர்ச்சி கொடுக்கிறார்.