Pandian Stores2: மீனாவுக்காக உண்மையை உடைத்த செந்தில்… இவரு வாய் சும்மா இருக்காதே!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
பேங்க் மேனேஜர் சூரிட்டி இருந்தால் நான் உடனே லோனை தயார் செய்து தந்துவிடுகிறேன் என்கிறார். ராஜி, கதிர் வெளியில் வந்து நிற்க உனக்கு கஷ்டமா இல்லையா என ராஜி கேட்க மத்தவங்க கண்டுக்க கூட இல்ல. இவங்க நம்பிக்கையா பேசி இருக்காங்க என்கிறார்.
ராஜி சூரிட்டி இல்ல. ஆனா நம்ம கிட்ட நகை இருக்கே என்கிறார். ஆனால் கதிர் இந்த நகையை யார் திருடி இருக்கதா நினைச்சிட்டு இருக்காங்க. நீதான் என ராஜி கூற அப்போ அதை உண்மையாக்க சொல்றீயா என்கிறார். ராஜி அது எப்படி உண்மையாகும் எனக் கூற இதை மாமாக்கிட்ட கொடுத்து உடனே உங்க வீட்டில் கொடு என்கிறார்.
எல்லாரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கின்றனர். செந்தில் பாண்டியனிடம் உங்களை மிஸ் செய்தேன் என்கிறார். மீனா, என்னிடமாவது பேசாம இருந்தால் பரவாயில்லை. இவரிடமாச்சும் பேசுங்க என்கிறார். பாண்டியன் நீங்க பெரிய ஆளு. உங்க பேச்சை கேட்காம இருக்க முடியுமா என்கிறார்.
கதிர் அவங்க என்ன பேசுறாங்க. நீங்க என்ன பேசுறீங்க எனக் கேட்க பாண்டியன் எல்லா விஷயத்திலையும் மூக்கை நுழைக்காதே என்கிறார். பாண்டியன், நீ என்னை அப்பானு நினைச்சிட்டு இருக்க சொன்னது பொய். உங்க அப்பாக்கிட்ட நீ இதை சொல்லாம இருந்து இருப்பீயா என்கிறார்.

லஞ்சம் வாங்காத நீ. இவன் செஞ்ச நேர்மையில்லாத வேலைக்கு துணையா இருந்து இருக்க என்கிறார். மீனாவை பாண்டியன் தொடர்ந்து குற்றம் சாட்டி கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறார். இதில் ஆத்திரமான செந்தில், நீங்க பெத்த பிள்ளைக்கு எதுவும் செய்யலைனு நினைச்சாலும் நினைக்காட்டியும் அதானே உண்மை என்கிறார். மீனா செந்திலை தடுக்க கோமதி செந்திலை திட்டிக்கொண்டு இருக்கிறார். அமைதியா உட்காரு என எல்லாரும் செந்திலை அடக்க முயல்கின்றனர்.
எனக்காக பணம் கொடுக்க யார் இருக்கா? எனக்காக செய்ய யார் இருக்கா? இதே மாதிரி ஒரு விஷயம் வேற வீட்டில நடந்து இருந்தா? அப்பாக்கிட்ட போய் கேட்பாங்க. ஆனா இவரிடம் போய் கேட்க முடியுமா? அன்னைக்கு கதிர் காசு கொடுத்தா வேலை கிடைக்கும்னு சொன்னான். ஒரு லட்சம் தான் சொன்னான். அதுக்கே இவர் என்ன பேசுனாரு தெரியுமா என்கிறார்.
இதுக்கு மேல பெரிய விஷயம் இருக்கு எனக் கூற கோமதி அதான் நிறைய பேசிட்டீயே. இன்னும் என்ன இருக்கு என்கிறார். செந்தில், இருக்குமா, அப்பா நீங்க லோன் விஷயம் தெரிஞ்சா அசிங்கப்பட்டு நிப்பீங்கனு சொன்னீங்களே. அது லோன் போட்டு தரலனாலும் நீங்க உமையாள் அத்தைக்கிட்ட அசிங்கப்பட்டு இருப்பீங்க என்கிறார்.
கோமதி அப்படி என்ன விஷயம் எனக் கேட்க மீனா செந்திலை உண்மை சொல்லாமல் அடக்க பார்க்க, நீங்க கொடுத்த காசை நான் பேங்கில் போடலை எனக் கூற பாண்டியன் யோசனையாக பார்க்கிறார். அரசிக்கு கார் வாங்க கொடுத்த காசை நான் திருடிட்டேன்.
மீனா அப்பாவிடம் அந்த காசை நீங்க கொடுத்ததா சொல்லி கொண்டு போய் கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் மீனாவுக்கே தெரியும். அவளும் என்னை திட்டிக்கிட்டே இருந்தாள். ஆனா மூணாவது நாள் உமையாள் அத்தை வந்து நின்னாங்க. நானும் காசை எடுத்துட்டு வர முடியாமல் அசிங்கப்பட போவதாக நினைத்து வந்தேன்.
ஆனால் மீனா காசுடன் வந்தா? எனக்கே தெரியாது. உங்களுக்கு போக இருந்த மானத்தை காப்பாத்துனா ஆனா அவளை தான் நீங்க இப்படி பேசிட்டு இருக்கீங்க என்கிறார். கோமதி கோபத்தில் செந்திலை அடிக்கிறார். பாண்டியன் நீ செஞ்சது தப்பே இல்லையா என்கிறார்.

நாங்களும் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறோம். எல்லாத்தையும் நானே தூக்கிட்டு போறேனா என்கிறார். உனக்கு அரசு வேலை வாங்குறதுக்கு வீட்டு காசை திருடுற எனத் திட்ட இவரிடம் இருந்து தப்பிக்க தான் அரசு வேலைக்கு போவதாக முடிவு எடுத்தேன். என்ன வேலை செஞ்சாலும் இவரிடம் இருந்து காசு இல்ல கஷ்டத்தை மட்டும் தான் தரார். அதான் வேறு வேலைக்கு போக முடிவெடுத்தேன் என்கிறார்.
பாண்டியன் ஊர் உலகத்தில் போய் பாரு. மத்த அப்பாவெல்லாம் எப்படி இருக்காங்கனு. உனக்கு நல்ல அப்பா இருக்கேன் எனக் கூற நீங்க நல்லா அப்பானு யார் சொன்னா என செந்தில் கேட்க யார் சொல்லணும். நான் நல்ல அப்பாதான் என்கிறார் பாண்டியன். நீங்க நல்ல அப்பாவே கிடையாது என கத்துகிறார் செந்தில்.