Pandian Stores2: செந்திலின் திருட்டுத்தனத்தை மாட்டிவிட்ட மாமனார்… ஆடி தீர்த்த பாண்டியன்!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்து செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த விஷயத்தினை சொல்கிறார். இனிமே இவருதான் கடைக்கு போக போறாரு போலம்மா என்கிறார். அது நல்ல முடிவுதான் டி. இனிமே கடையை உங்களுக்கு வாங்கிக்கணும்.
என்னம்மா சொல்ற நீ என தங்கமயில் கேட்க மாப்பிள்ளை கடைக்கு போய் அங்க உன் மாமனார் நம்பிக்கையை சம்பாரிச்சிட்டு அவரை வீட்டில் உட்கார வைக்கணும். அதும் இல்லாம வீட்டையும் உங்களுக்கு மாத்தி கொடுக்கணும் என்கிறார்.
என்னம்மா இது அஞ்சு பேருக்கு உரிமை உள்ளது எனக் கேட்க பெரிய செலவு செய்து வச்ச பொண்ணைக்கும், ஓடிப்போன பொண்ணைக்கும் சொத்து கொடுக்கணுமா? அப்படியும் மூணு பேருக்கு உரிமை இருக்கேம்மா என்கிறார். அதான் செந்திலுக்கு அரசு வேலை கிடைச்சிட்டு, கதிர் கடைக்கே வரது இல்ல என்கிறார். Pandian Stores 2 episode update, Pandian Stores 2 today episode, Pandian Stores 2 latest episode, Pandian Stores 2 episodio update, Pandian Stores 2 serial update, Pandian Stores 2 episode summary, Pandian Stores 2 episode recap, Pandian Stores 2 vijay tv, Pandian Stores 2 story update, Pandian Stores 2 episode highlights, Pandian Stores Season 2 update, Pandian Stores 2 spoiler, Pandian Stores 2 serial news, Pandian Stores 2 cast update, Pandian Stores 2 new episode release

சும்மா இரும்மா என தங்கமயில் பேசிக்கொண்டு இருக்க அங்கு சரவணன் வர போனை வைத்துவிடுகிறார். என்ன செய்ற எனக் கேட்க நான் தான் கஷ்டப்பட்டு சமைச்சேன் என்கிறார். சரவணன் பெரிதாக தங்கமயிலிடம் பேசாமல் சமாளிக்கிறார்.
அடுத்த நாள் காலையில் செந்தில் கனவுக்கண்டு கொண்டு இருக்கிறார். சம்பளம் குறித்து பேச பாண்டியன் வேலைக்கே போகாமல் இந்த கனவு தேவையா எனத் திட்டுகிறார். அப்போ மீனாவின் அப்பா வர அவரை வரவேற்று வீட்டிற்குள் உட்கார வைத்து பேசுகின்றனர்.
அவர் பேசிக்கொண்டு இருக்கும் போது, நான் வேலை வாங்கி கொடுத்தது கூட பிரச்னையா இல்ல. நீங்க பத்து லட்சம் வரை தேற்றி கொடுக்கும் வரை அந்த வேலையை தக்க வைப்பதுதான் பிரச்னையா போச்சு. நல்லவேளை நீங்க ரெடி பண்ணி கொடுத்துட்டீங்க என்கிறார். எல்லாரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர். மீனா அப்பா கிளம்ப பாண்டியன் செந்திலை திட்டி தீர்க்கிறார்.
பத்து லட்சம் பணத்தை என்ன செஞ்ச வீட்டு பத்திரத்தை அடகு வச்சியா எனத் திட்ட அவர் சொல்வதற்கு முன் பத்து லட்சம் பணத்தினை லோன் போட்டு கொடுத்தேன் என்கிறார். இதில் மேலும் அதிர்ச்சியாகி விடுகிறார். மீனாவையும் கண்டப்படி பாண்டியன் திட்டிவிட்டு அங்கிருந்து செல்ல மீனா பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.