Pandian Stores2: கோமதியை லாக் செய்த ராஜி… பொய்யை பத்தி நீங்க பேசலாமா தங்கமயில்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனாவும், செந்திலும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனா வேலை இல்ல ஆனா அசதியா இருக்கு என்கிறார். செந்தில் எதையாவது நினைச்சா அப்படிதான் இருக்கும் என்கிறார். நான் எதையும் யோசிக்கலையே என்கிறார்.
செந்தில், அப்பா, அம்மா பேசாம இருக்கது உனக்கு பிரச்னை இல்லையா என்கிறார். அத்தை பேசாம இருக்கது, மாமா பேசாம இருக்கதும் கஷ்டமா தான் இருக்கு என்கிறார். செந்தில் நான் உண்மையை சொல்லி இருப்பேனே எனக் கேட்க அது வேற இந்த லோன் விஷயத்தை விட அது தெரிஞ்சா இன்னும் மோசமாகும் என்கிறார்.
வேலைக்கு போறீங்க. அதை பத்தி யோசிங்க என்கிறார் மீனா. பின்னர் செந்திலுக்கு வேலைக்கு போக டிரஸ் எடுத்து வந்து தருகிறார். பின்னர் செந்தில் சந்தோஷமாகி மீனாவிடம் லவ் யூ சொல்கிறார். சமையலறையில் கோமதி இருக்க ராஜி பேச முற்படுகிறார்.
ராஜி, மீனா அக்காக்கிட்ட பேச வேண்டித்தானே எனக் கேட்க அவங்க பாவம் என்கிறார். கோமதி அவ பாவமா முகத்தை வச்சிக்கிட்டு தான் என்னை ஏமாத்திட்டா. அவளுக்கு என் மேல பாசம், மரியாதை, அன்பு இல்லை. அதான் என்கிட்ட மறைச்சிட்டா என்கிறார்.

அப்போ ஒரு விஷயத்தை மறைச்சா பாசம், மரியாதை, அன்பு இல்லனு அர்த்தமா என ராஜி கேட்க ஆமாம் என்கிறார் கோமதி. அப்போ உங்களுக்கும் மாமா மேல பாசம், மரியாதை, அன்பு இல்லதானே என்கிறார். அதெல்லாம் நிறைய இருக்கு என்கிறார்.
அப்போ ஏன் எனக்கும், கதிருக்கும் கல்யாணம் செஞ்சி வச்ச விஷயத்தை மறைச்சது தப்பு தானே. நீங்க பண்ணது சரினா, அக்கா பண்ணதும் சரிதான். கொஞ்சம் பேசுங்களே என ராஜி சொல்லிவிட்டு செல்ல கதிர் அதை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ராஜி சென்றதும் கோமதி இதை கதிரிடம் கேட்க அவரும் ராஜி எதுவும் தப்பா பேசலையே. என் ஆளு கரெக்ட்டா தானே பேசி இருக்கா என்கிறார். இதை போனை எடுக்க வந்த ராஜி கேட்க அவர் செம சந்தோஷமாகி தன்னுடன் கதிர் இருந்த சில விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுகிறார்.
பின்னர் ரூமுக்கு வரும் கதிர், எதுக்கு அம்மாவை கேள்வி கேட்ட அவங்க மனசில் என்ன இருக்குனு பாத்து பேசணும் என்கிறார். உடனே ராஜியும் இனிமே பாத்து பேசுறேன் என்கிறார். தங்கமயில் ரூமில் இருக்க அவர் சரவணனிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
தங்கமயில் தூக்கம் வரல எனக் கூற சரவணன் என்ன ஆச்சு என்கிறார். மாமா, அத்தை நினைச்சா கஷ்டமா இருக்கு. மீனா மேல எவ்வளவு நம்பிக்கை வச்சி இருந்தாங்க. ஆனா அவ வேலைக்காக 10 லட்சம் லோன் போட்டு கொடுத்து இருக்கா. எப்படிதான் இப்படி பொய் சொல்ல மனசு வந்துச்சோ என்கிறார்.
இதை கேட்டு கடுப்பாகும் சரவணன் நீ இதை சொல்லலாமா? மீனா பொய் சொன்னுச்சுனு சொல்லிட்டு இருக்கியே. நீ பேசலாமா அதை. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரை என்கிட்ட எவ்வளவு பெரிய விஷயம் சொன்ன. மீனா சொன்ன விஷயத்தால யாருக்காச்சும் நஷ்டம் வந்துச்சா?
ஆனா நீ சொன்ன பொய் நினைச்சு பாரு. நான் உன்கிட்ட பிள்ளைக்காக கூட இருப்பேனு சொல்லி இருக்கேன். அதனால ரொம்ப பொங்காம, உன் வேலையை பாரு. பொய் சொன்னத பத்தி பேசுற ஆள பாருனு என எழுந்து செல்கிறார்.
அடுத்த நாள் காலை கோமதி செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த விஷயம் குறித்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பாண்டியன் வர செந்தில் வேலைக்கு போறான் நீங்க இருக்க வேண்டாமா என கேட்க அவன் வேலைக்கு போறதுக்கு நான் ஏன் இருக்கணும் என கூறிவிட்டு செல்கிறார்.
பின்னர் சமையலறையில் தங்கமயில் மற்றும் ராஜி இருக்க நீ என்ன இங்க பண்ணிக்கிட்டு இருக்க என கோமதி தங்கமயில் கேட்கிறார். நான் ஹெல்ப் பண்ண வந்தேன். உங்களை பாத்தா கஷ்டமா இருக்கு. நீங்க பேசலைனு நானு மீனாகிட்ட பேசுறது இல்ல என்கிறார் தங்கமயில். ராஜி, இது என்ன கதையா இருக்கு, அத்தையே அக்காக்கிட்ட பேச போறாங்க எனக் கூற கோமதி ஏய் ஏய் நான் எப்போ சொன்னேன். நான் உங்க மாமியார் எனக் கூறுகிறார்.