அப்பாவியாகும் தங்கமயில்… சரவணனை ரவுண்ட் கட்டும் கோமதி… அடுத்த பஞ்சாயத்து!

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொடராக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் அடுத்தக்கட்ட பரபரப்பை தொடங்க இருக்கிறது. 
 
pandian stores 2

விஜய் தொலைக்காட்சியின் அடுத்த சீசன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் இன்றைய எபிசோட் நடக்க இருக்கும் சுவாரஸ்ய தொகுப்புகள். 

அஞ்சலி இனிமேல் பேச வேண்டாம் எனக் கூறிவிட்டதால் சரவணன் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். இதை பார்க்கும் கோமதி கடுப்பில் திட்டிவிடுகிறார். நீ இப்படியே செஞ்சிட்டு இருந்தா நம்மளால அந்த குழந்தையை பாக்கவே முடியாது என்கிறார். 

அதே போல வெற்றிவேலை அழைத்து வருகின்றனர். அப்போது கோமதி சக்திவேலை முறைத்து கொண்டே அண்ண கொஞ்சம் உஷாரா இருங்க. எதும் பிரச்சனைனா எனக்கு குரல் கொடுங்க என்ச் சொல்லி செல்கிறார். வீட்டிற்குள் வந்ததும் குமார் காலை பிடித்து மன்னிப்பு கேட்கிறார். 

வீட்டில் இருந்தவர்கள் எல்லாமே குமாரை திட்டிக்கொண்டு இருக்கின்றனர். குமாரும் வெற்றிவேல் காலை பிடித்து கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். வெற்றிவேல் உன்னை நான் இப்படி நினைக்கவே இல்லை. கதிரை அரெஸ்ட் செய்ய வச்சது அதவிட மோசம் என்கிறார். 

பின்னர் ராஜி மற்றும் கதிர் வாக்கிங் போகும் போது அங்கு குமார் வந்து கதிரை திட்டுகிறார். இதில் கடுப்பாகும் ராஜி நீ என்ன ஓவரா பேசுற? எங்க அப்பாவை தள்ளிவிட்டது நீ. கதிரை அந்த வீட்டுக்குள் வர கூடாதுனு சொல்ல நீயாரு? அங்கு எனக்கும் சரி கதிருக்கும் சரி உரிமை இருக்கு என்கிறார். 

பின்னர் மயில் ஹாஸ்பிட்டலுக்கு தனியாக செல்கிறார். அங்கு இருப்பவர்களை பார்த்து தனியாக இருப்பதில் ஃபீல் செய்கிறார். அப்போ நர்ஸ் வந்து செக் செய்து விட்டு நீங்க தனியாவா வந்தீங்க எனக் கேட்க அப்போது கோமதி வந்து நிற்கிறார். டாக்டரிடம் பேசி எல்லாம் சரியாக இருப்பதை கேட்டுவிடுகிறார். 

பின்னர் மாத்திரை வாங்க காத்திருக்கும் போது அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போ மீனா கால் செய்து டாக்டரை பார்த்தீங்களா எனக் கேட்க பார்த்துட்டேன். தனியாவா வந்தீங்க என மீனா கேட்க அத்தை வந்திருப்பதை சொல்கிறார். 

பின்னர் செந்தில் மற்றும் மீனா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இனிமேல் தங்கமயில் சீக்கிரமாக பாண்டியன் வீட்டுக்குள் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

From Around the web