Pandian stores2: ஒரு கட்டத்தில் டெலிவரி செய்யப்பட்ட ராஜியின் பைக்… குடும்பத்தில் சந்தோஷம்!

by AKHILAN |
Pandian stores2: ஒரு கட்டத்தில் டெலிவரி செய்யப்பட்ட ராஜியின் பைக்… குடும்பத்தில் சந்தோஷம்!
X

Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

கோமதி மற்றும் மீனா இருவரும் சமையலறையில் சமைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு வரும் தங்கமயில் பைக் எப்போது வரும் என கேட்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவதாக சொல்லி இருந்ததாக கோமதி சொல்கிறார்.

அப்பொழுது மீனா தங்கமயிலிடம் நீங்கள் வேலைக்கு போகலையா என கேட்க நல்லா இருந்த டீச்சர் வேலையை விட்டுட்டு ஆபீஸ் வேலைக்கு போனாள். அங்க ஓவர் வேலையா இருப்பதால் வேலை போய்விட்டதாக கோமதி சொல்கிறார். உடனே தங்க மயில் வேலை போகலை நான் விட்டேன் என்கிறார்.

எதுவோ ஒன்னு வேலை இல்ல என்கிறார். மறுபக்கம் ராஜி தயாராகி கொண்டு இருக்க மீனா அங்கு வந்து எதற்காக இந்த மேக்கப் என கேட்க பைக்கு கொடுக்கும்போது போட்டோ எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அதற்காக தான் என்கிறார்.

அப்போ நீ கதிரோட பைக்கில் எங்க ரைட் போக போற எனக் கேட்க அதெல்லாம் நான் மாட்டேன் என்கிறார் ராஜி. பின்னர் கால் வர பைக் வந்துவிட்டதாக சொல்லி மீனாவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார். எல்லோரும் வாசலில் வந்து நிற்க பைக்கை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

ராஜியை நிற்க வைத்து போட்டோ எடுக்கிற பின்னர் சாவியை கொடுக்க போக கதிரை வந்து வாங்கிக் கொள்ள சொல்கிறார் ராஜி. ஆனால் கதிர் மறுக்க குடும்பத்தினர் அட்வைஸ் செய்து அனுப்பி வைக்க இருவரும் சேர்ந்து சாவியை வாங்கி கொள்கின்றனர்.

ஒரு ரவுண்ட் போங்க என பாண்டியன் சொல்ல ராஜி தயாராகி விடுகிறார். ஆனால் அவரை வம்பு செய்யும் விதமாக கதிர் அவரை அழைக்காமல் பழனியை அழைத்து செல்கிறார். உடனே ராஜி கடுப்பாகி விடுகிறார். பழனி ரவுண்டு போய் வந்ததும் கோமதி அவருடன் ரவுண்டு செய்கிறார்.

பின்னர் சரவணனை அழைத்து சுற்றி விட்டு வர பாண்டியனை அழைக்கிறார். பாண்டியனும் தன்னைக் கடையில் விடுமாறு சொல்லிவிட்டு அவர் வண்டியை பழனியை எடுத்து வர சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதை பார்த்து ராஜி கோபத்தில் நிற்கிறார்.

மீனாவிடம் இவனுக்கு கொழுப்பு பாத்தீங்களா எனச் சொல்ல அவரும் நீ தான் ரவுண்ட் போக மாட்டேன். அவன் கூப்பிட்டால் கூட வரமாட்டேன் என்று தானே சொன்ன என்கிறார். வீட்டிற்குள் ராஜி சென்று விடுகிறார். கடைக்கு வரும் கதிர் பாண்டியனை விட்டு செந்திலை அழைத்து செல்கிறார்.

செந்திலிடம் வண்டியை கொடுத்து ஓட்டவிட்டு பின்னால் அமர்ந்து கொண்டு வருகிறார் கதிர். இருவரும் பேசிக் கொண்டு வர ராஜியை ரவுண்டு அழைத்து சென்றாயா எனக் கேட்க இன்னும் இல்லை என்கிறார். முதலில் அந்த புள்ளைய ரவுண்டு அழைத்து செல் எனக் கூறி இருவரும் பேசிக் கொண்டு செல்கின்றனர்.

வீட்டில் எல்லோரும் கல்யாண விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது வரும் சரவணன் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க மயிலை அழைத்து செல்வதாக சொல்லிவிடுகிறார். மயிலும் சந்தோஷத்துடன் கிளம்பி வெளியில் வர நாம பத்திரிக்கை வைக்க போகல உன்னுடைய கல்லூரிக்கு செல்கிறோம் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

Next Story