Pandian Stores2: மீனாவின் கெத்து வலுவா இருக்கே… சக்திவேலுக்கு பல்ப் கொடுத்த சம்பவம்…

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் தொகுப்புகள்.
கோமதி டிவியில் மீனா லஞ்சம் வாங்கிய செய்தியை பார்த்துவிட்டு பதறி பாண்டியனுக்கு கால் செய்து விஷயத்தை சொல்கிறார். அவரும் செந்திலும் விரைவாக கிளம்பி மீனாவின் அலுவலகத்திற்கு வந்து விடுகின்றனர். அதிகாரிகள் மீனாவின் அறையை சோதனை செய்து கொண்டிருக்கின்றனர்.
மீனா அமைதியாக இருக்க அங்கு வரும் பாண்டியன் அதிகாரிகளிடம் மருமக அப்படி செய்ய மாட்டா என்கிறார். அங்கே இருக்கும் சக்திவேல் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சோதனை எல்லாம் முடித்து விட மீனாவை அதிகாரிகள் கைது செய்யப் போவதாக சொல்லிவிடுகின்றனர்.
பாண்டியன் மற்றும் செந்தில் பதறிப் போய்விட மீனா அமைதியாக உங்களுடைய விசாரணைக்கு எல்லாம் நான் ஒத்துழைப்பு தருகிறேன் ஆனால் எனக்கு ஒரு நிமிடம் டைம் தர வேண்டும் என்கிறார். எல்லோரும் என்னவென்று பார்த்துக் கொண்டிருக்க பக்கத்தில் இருந்த மேடையில் அவர் போனை ஆன் செய்திருந்த வீடியோவை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன் வந்து காட்டுகிறார்.
அந்த வீடியோவில் சம்பந்தப்பட்டவர் வந்து மீனாவிடம் வலுக்கட்டாயமாக பணம் திணித்த விஷயத்தை அவர்கள் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். சம்பந்தப்பட்டவரை கன்னா பின்னாவான திட்டிவிட்டு அதிகாரிகள் மீனாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர்.
பின்னர் தன்னுடைய மேடையில் கெத்தாக வந்து நிற்கும் மீனா இவங்க ரெண்டு பேரு தான் என்னை மாட்டி வைக்க ஆளை பிடித்து, அதிகாரிகளுக்கு கால் செய்து மீடியா வரை அழைத்து வந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் செந்தில் கோபப்பட்டு அவரை அடிக்கப் போக பாண்டியன் தடுத்து விடுகிறார்.
கோபமான சக்திவேல் முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். பின்னர் பாண்டியன் மற்றும் செந்தில் உடன் வாசலில் மீனா பேசிக் கொண்டிருக்கிறார். உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என செந்தில் கேட்க காலையில் வேலைக்கு வரும்போது அவரை வழிமறித்து குமார் மிரட்டிய விஷயத்தை கூறுகிறார்.
இன்றுடன் உன்னுடைய வேலை அவ்வளவுதான். நீ இனிமே வாழ்க்கை ஃபுல்லா என்று நினைத்து வருத்தம் தான் படணும் என்கிறார். இதனால் மீனா தான் சுதாரித்துக் கொண்ட விஷயத்தையும் சொல்கிறார். அது மட்டும் அல்லாமல் வாசலில் டீ குடிக்கும் போது சக்திவேல் மற்றும் குமார் இருவரும் தன்னுடைய அலுவலக அதிகாரி மற்றும் இன்னொருவருடன் பேசிக் கொண்டதையும் பார்த்து விடுகிறார்.
இதனால்தான் முன்கூட்டியே வீடியோவை ஆன் செய்து வைத்ததாகவும் மீனா சொல்ல பாண்டியன் அவரின் அறிவை நினைத்து ஆச்சரியப்படுகிறார். பின்னர் செந்தில் பயந்தே போய்ட்டேன் என சொல்ல அவரை சமாளித்து அனுப்பி வைக்கிறார் மீனா. பின்னர் கதிரிடம் இந்த விஷயத்தை செந்தில் கூற இருவரும் குமாரை தேடி சென்று கொண்டு இருக்கின்றனர்.