Pandian Stores2: குமரவேலை அடி துவைத்த பாண்டியன் குடும்பம்… இனிமே கஷ்டம் தானே!

Pandian Stores2: விஜய் தொலைககட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
செந்தில் மற்றும் கதிர் இருவரும் குமரவேலை தேடிச் செல்கின்றனர். அவரை ஒரு இடத்தில் கண்டுபிடிக்க தங்கள் வீட்டில் செய்ததற்காக மாற்றி மாற்றி அடிக்கின்றனர். மீனாவையே மிரட்டிறீயா என செந்தில் அடிக்கிறார். அரசியை ஏமாற்றி காதலித்ததுக்காக கதிரும் குமாரை அடித்துக் கொண்டிருக்கிறார்.
பின்னர் அங்கிருப்பவர்கள் இருவரையும குமாரிடம் இருந்து பிரித்து விட என்னையே அடிச்சிட்டீங்களே உங்களை பார்த்துக்கிறேன் என பைக்கில் ஏறி குமார் தப்பித்து விடுகிறார். தொலைக்காட்சியில் மீனாவின் சாதுரியத்தால் தப்பித்த விஷயம் குறித்து செய்தி வந்து கொண்டிருக்கிறது.
அதை பார்க்கும் கோமதி சந்தோஷப்பட்டு தங்கமயிலின் அம்மாவிடம் இதை உங்க அம்மா கிட்ட சொல்லிட்ட தானே என்கிறார். அவரும் சொல்லிட்டேன் என்கிறார். அப்போ பாண்டியன் வர மீனா குறித்து ஆஹா ஓஹோ என பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
சக்திவேல் வேலை குறித்து சொல்ல கடுப்பாகும் பாண்டியன் நேராக சென்று வீட்டில் தன் மருமகளுக்கு நீங்க பிரச்னை கொடுத்தீங்க. ஆனா அவ அறிவாளி உங்களை முடிச்சி விட்டா என சத்தம் போடுகிறார். இனிமே இதுமாதிரி பொம்பள பிள்ளைக்கிட்ட வச்சிக்காதீங்க என்கிறார்.
இதை கேட்கும் முத்துவேல் கோபமாகி விடுகிறார். வீட்டிற்குள் வந்து குமாரிடம் சத்தம் போட்டு அவரை அடிக்கிறார். குறுக்கே வரும் சக்திவேல் என் பையனை எதுக்கு அடிக்கிறீங்க எனக் கேட்கிறார். நீங்க தான அந்த பொண்ணு வேலையை காலி பண்ண சொன்னீங்க எனக் கேட்க இப்படி ஒரு விஷயத்தை நான் செய்ய சொன்னேனா என்கிறார்.
இல்லை என சக்திவேல் கூற முத்துவேலிடம் அவ வேலையை காலி பண்ண இது முறை இல்லை என திட்டுகிறார். மகனை ரூமிற்குள் அழைத்து செல்லும் சக்திவேல் அந்த பொண்ணு எதோ மிரட்டுனாங்கனு சொல்றாங்க என விஷயம் என குமாரிடம் கேட்கிறார்.
தெருவில் மீனாவை சந்தித்து மிரட்டிய விஷயத்தை கூற அவரை அடிக்கப் பாய்கிறார் சக்திவேல். உனக்கெல்லாம் அறிவு இருக்கா என்ன? உன்ன மாதிரி அவ முட்டாள் இல்லை. நீ பேசினதை வச்சு நடக்க போறத கண்டுபிடிச்சு தப்பிச்சிட்டா என்கிறார்.