Pandian Stores2: அரசி மற்றும் குமார் இருவரின் காதலில் சுகன்யா செய்த திட்டங்களை உடைத்த ராஜி மற்றும் மீனா!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
குழலி வீட்டில் அரசியிடம் கல்யாணம் குறித்து பேசப்போக மீனா மற்றும் ராஜி அரசி படிப்பை முடிக்கட்டும். அப்புறம் இது பற்றி எல்லாம் பேசிக்கலாம் என்கிறார். அப்போ பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். பாண்டியன் அரசிக்கு பிடித்த சாப்பாட்டை ஹோட்டலில் சென்று வாங்கி வந்திருப்பதாக சொல்கிறார்.
பாண்டியன் சந்தோஷமாக பேசினாலும் அரசி கவலையாகவே இருக்கிறார். பின்னர் குடும்பத்தினர் சுற்றி அமர்ந்து சாப்பிட உட்காருகின்றனர். பாண்டியன் சாப்பாட்டை பிசைந்து அரசிக்கு ஊட்டி விட குடும்பத்தினர் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
பின்னர் பாண்டியன் குழலிக்கும் ஊட்டி விடுகிறார். எல்லாருக்கும் கொடுக்க மயிலுக்கு கொடுக்கலாமா எனக் கேட்க அதெல்லாம் ஒருமுறை கொடுக்கலாம் என்கிறார். பின்னர் எல்லாருக்கும் பாண்டியனே உருண்டை பிடித்து கொடுக்க சந்தோஷமாக இருக்கின்றனர்.
பழனி கேட்க வீட்டில் இருக்கும் பொம்பளைங்க சாப்பிடட்டும். அப்புறம் பார்த்துக்கலாம் என்கிறார். பின்னர் பேசிக்கொண்டே எல்லாருக்கும் சாப்பாடு பரிமாற கோமதிக்கு சாப்பாட்டை கொடுக்க அவர் வாயை திறக்கிறார். ஊட்டி விடுங்க என எல்லாரும் கலாய்க்க பின்னர் பாண்டியன், கோமதிக்கு சாப்பாட்டை கொடுக்கிறார்.
குழலி பின்னர் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார். பாண்டியன் எனக்கு மனசுல சில விஷயம் இருக்கு. அதை கேட்கவா எனக் கூற அரசி என்னப்பா என்கிறார். நீ போய் மாட்டிக்கிட்டது சரிதான். எதுக்காக நீ அவனை பார்க்க போன அப்பா கோபப்படுவேனு நினைக்காத. உண்மையை அப்பாக்கிட்ட சொல்லு என்கிறார்.
கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் நீ அவனை பார்க்க அங்க போய் இருக்க, எதுக்கு போன என்கிறார். மத்தவங்களிடம் நீ இதை பத்தி பேசலை. உன்னை யார் அவனை போய் பார்க்க சொன்னது எனக் கேட்க மயிலும் யாராச்சும் ஐடியா கொடுத்து இருப்பாங்க என்கிறார்.

அரசி பதற்றத்துடன் இருக்க மீனா, ராஜி நம்மளே சொல்லிடலாம் என முடிவெடுக்கின்றனர். நடந்த எல்லா பிரச்னைக்கு காரணம் ஒரே ஆள்தான். அவங்க யாருனு கூட தெரியும் எனக் கூற குடும்பத்தினர் அதிர்ச்சியாக நிற்க மீனா சுகன்யாவை கை காட்டி இவங்க தான் எல்லாத்துக்கும் காரணம் என்கிறார்.
ஆனால் சுகன்யா நான் என்ன செஞ்சேன் எனக் கேட்க கல்யாணத்துக்கு முதல் நாள் அரசி எங்க அண்ணனை பார்க்க போனது நீங்கதானே. ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு உங்க வாழ்க்கையை கெடுக்க கூடாதுனுதான் நான் சொல்லலை என்கிறார்.
நம்ம குடும்பம் பட்ட எல்லா கஷ்டத்துக்கும் இவங்க ஒரு ஆள் காரணம் என்கிறார் மீனா. ஆனால் சுகன்யா பதற்றத்துடன் நடிக்க தொடங்குகிறார். கோமதி எங்களுக்கு தெரியாத அடுத்த ரகசியமா எனக் கேட்க ராஜி சொல்றோம் என்கிறார்.
குமார் கல்யாணத்தை நிறுத்த நிறைய பிளான் செஞ்சி இருக்கான். எதுவுமே நடக்கலை. கடைசியில் போட்டோ எடிட் செஞ்சு இவங்க மூலமா அரசியை மிரட்டி இருக்கான் என்கிறார். மீனாவும், அந்த போட்டோவை வச்சி அவன் சொன்ன இடத்துக்கு மிரட்டி இவங்களை வச்சிதான் அரசியை வர வச்சி இருக்கான் என்கிறார்.
சுகன்யா ஆபாண்டமா பழி போடாதீங்க என்க நாங்களா பழி போடுறோம். இவங்க இது மட்டும் இல்ல. இன்னும் என்ன செஞ்சி இருக்காங்க தெரியுமா? படம் பார்க்க போனது கூட இவங்க திட்டம்தான். இவங்க கூட வரதா சொல்லிதான் அரசி தியேட்டருக்கே போய் இருக்கா?
அங்க இவங்க எஸ்கேப் ஆயிட்டாங்க. அன்னைக்கு காலேஜ் கூட்டிக்கிட்டு போனப்ப குமார் அங்கு இருந்தான் என வரிசையாக சுகன்யா சொன்ன காரியங்களை மீனா மற்றும் ராஜி போட்டு உடைக்கின்றனர். குடும்பமும் அதிர்ச்சியில் நிற்கின்றனர்.
பழனி நீ அரசிக்கு அத்தைதானே வேற எதும் இல்லையே. இந்த நினைப்புல தான் இங்க சுத்திட்டு இருந்தீயா என்கிறார். கதிர் இதை கேட்டு கோபமாக குமாரிடம் சண்டைக்கு போக கோமதி முதலில் வீட்டு கதையை முடிப்போம் என சுகன்யாவிடம் வந்து நிற்கிறார்.