Pandian Stores2: சுகன்யாவை வெளுத்து வாங்கிய கோமதி… சும்மா இருந்த சூறாவளிய கிளப்பி விட்டாங்களே!

by AKHILAN |
Pandian Stores2: சுகன்யாவை வெளுத்து வாங்கிய கோமதி… சும்மா இருந்த சூறாவளிய கிளப்பி விட்டாங்களே!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சுகன்யா குறித்து அதிர்ச்சியான சம்பவங்களை ராஜி மற்றும் மீனா சொல்ல குடும்பமே உறைந்து நிற்கின்றனர். பின்னர் சுகன்யா இவங்க ரெண்டு பேருக்குமே என்ன பிடிக்காது. அதான் இப்படி மோசமாக சொல்வதாக சொல்லி விடுகிறார்.

உடனே கோமதி அரசியை அருகில் அழைத்து இவ சொல்றது உண்மையா, மீனா, ராஜி சொல்றது உண்மையா எனக் கேட்க அரசி அமைதியா இருக்கிறார். பின்னர் சுகன்யா தொடர்ந்து நடிக்க கடுப்பில் அண்ணிகள் பக்கம் தலையாட்டி விட கோமதி கொதித்து விடுகிறார்.

இதுக்காக தான் இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் ஓடிட்டு இருந்தியா எனக் கேட்டு மாற்றி மாற்றி அடிக்கிறார். அன்னைக்கு இவளை பயப்படுத்தி அனுப்பி வச்சிட்டு தான் எங்க கூட நல்லவ மாதிரி நின்னியா எனக் கேட்க சுகன்யா பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

உனக்கு ஒரு தங்கச்சி இருந்து இருந்தா அவனை மாதிரி ஒருத்தனுக்கு கட்டி வைப்பீயா எனக் கேட்க அடித்து விடுகிறார். என்ன போஸ்டர் அடிப்பேனு பயப்படுத்தினானா நல்லவளா நீ இருந்தா அவனை காறி துப்பி இருந்து இருக்கணும். இவளை மிரட்டி இருக்க என சத்தம் போடுகிறார்.

இந்த கோமதி இருக்க வரைக்கும் அவ பிள்ளைங்களை யாராலும் தொட முடியாது. உனக்கும், உன்னை அனுப்பின அவங்களுக்கும் சொல்லிக்கிறேன். எனக்கு என் பிள்ளைங்க முக்கியம். அவங்களுக்கு எதுவும் ஆபத்து வந்தா சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்.

பின்னர், பழனி இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கேன். அவ என்னை படுத்துன கஷ்டத்தை சொல்ல முடியாது. சரவணனுக்கு தான் இதுவரை எல்லாம் தெரியும். அவளை அவங்க வீட்டுக்கே அனுப்பினா ரொம்ப சந்தோஷமா இருப்பேன் எனப் பேசிக்கொண்டு இருக்கும் போது பாண்டியன் வருகிறார்.

அவர் பழனியை ஒருமாதிரியாக பார்க்க நான் புரிஞ்சிக்கிறேன். அவளை துரத்தினாலும் கவலைப்பட மாட்டேன் என்கிறார். பாண்டியன், என்ன பேசுற அவ ஏற்கனவே வாழ்க்கையை தொலைச்சுட்டு வந்த பிள்ளை. இன்னொரு முறை அது நடக்க கூடாது.

நீ இனிமே அந்த பிள்ளை பிரச்னையை செய்ய கூடாதுனு சொல்லி வை என்கிறார். ஆனால் பழனி என்னால் எதுவும் சொல்ல முடியாது மச்சான். அவ எனக்கு பயப்படுற ஆள் இல்ல. ஆம்பளையா இருக்கதால சிலதை என்னால் சொல்ல முடியலை என்கிறார்.

பாண்டியன் அதிர்ச்சியாக என்னவென கேட்க சரவணன் அத்தை சரியா இல்லை எனக் கூற பழனி கல்யாணத்தில் இருந்து சுகன்யா நடந்து கொண்ட எல்லா விஷயத்தை சொல்லி அழுகிறார். பாண்டியன் அதிர்ச்சியில் இருக்கிறார்.

இது ஏன் நீ என்னிடம் சொல்லலை எனக் கேட்கிறார்.

அன்னைக்கு நடந்தப்ப கூட நான் எதுவுமே செய்யலை. அவ தான் எனக்கு எல்லாம் செய்றா? இந்த கல்யாணம் நடக்காம இருந்து இருந்தா நான் நிம்மதியா இருந்து இருப்பேன். அரசி வாழ்க்கையும் கஷ்டமா போய் இருக்காது என்கிறார். பாண்டியனும் வருத்தப்பட்டு பேசுகிறார்.

கதிர் அந்த குமரவேலை என்ன செய்ய எனக் கேட்க செந்தில் கை, காலை உடைக்கணும் எனக் கூற பாண்டியன் சூப்பர் இப்படி பண்ணிட்டு ஜெயிலுக்கு போங்க. வீட்டுல இருக்கவங்க கோர்ட், கேசுனு அழைறோம். அப்போ அவனை சும்மா விடப்போறீங்களா என்கிறார் கதிர்.

அவனை போலீஸில் கேஸ் கொடுத்து விடுவோம் என பாண்டியன் கூற கதிர் அவனை நாங்களே பாத்துக்கிறோம் என்கிறார். செந்திலும் ஆமா அவனுக்கு கொடுக்க வேண்டியதை நாங்களே கொடுக்கிறோம் என்கிறார். பாண்டியன் கடுப்பாகி பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

Next Story