Pandian Stores2: மகளுக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாண்டியன்… குமரவேலுக்கு ஆப்பு தயார்!

by AKHILAN |   ( Updated:2025-07-20 12:30:42  )
Pandian Stores2: மகளுக்காக போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாண்டியன்… குமரவேலுக்கு ஆப்பு தயார்!
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

வீட்டில் குமார் இன்னொரு பெண்ணுடன் பைக்கில் வலம் வந்த விஷயத்தை குழலி, கதிர் பார்த்து வீட்டில் பிரச்னையாக எல்லாரும் அடித்துக்கொண்டு இருக்கின்றானர். இதில் கதிர் குமாரை அடிக்க பாய அரசி கல்யாண கதை விவகாரத்தை உடைத்து விடுகிறார்.

அப்பத்தா இந்த விவகாரத்தில் அரசி மற்றும் குமாரை கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்கிறார். ஆனால் பாண்டியன் தன் மகளை இவனுக்கு கட்டி வைக்கவே முடியாது என வம்படியாக பேசி அரசியை தாலியை கழற்றி எறிந்து விட்டு வரச்சொல்கிறார்.

அரசியும் அப்பாவிடம் சென்று விட வீட்டில் சுகன்யா செய்த விஷயத்தையும் மீனா மற்றும் ராஜி இருவரும் சொல்லி விட கோமதி வெகுண்டு எழுந்து கத்திக்கொண்டு இருக்கிறார். இதில் சுகன்யாவிற்கு தண்டனை கொடுத்து விட குமாரை என்ன செய்யலாம் என்கிறார் பாண்டியன்.

கதிர் மற்றும் செந்தில் அடித்து காலை உடைக்கலாம் எனப் பேச பாண்டியன் அவர்களை தடுத்து விடுகிறார். பின்னர், அரசியை அழைத்து சென்று காவல்நிலையத்தில் புகார் கொடுக்க குமார் செய்ததை எழுதிக்கொடுத்து விடுகின்றனர்.

இதனால் இந்த வார புரோமோவில் குமரவேல் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார். இதை ராஜி மற்றும் குடும்பத்தினர் நின்று பார்க்க அடுத்தக்கட்டம் அரசியின் கல்யாண கதை சதீஷுடன் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் மயிலின் விவகாரம் எதுவும் வெடிக்கும் என்பதும் ஒரு பேச்சாக இருக்கிறது. மற்றவர்களின் பிரச்னைகள் முடிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்த ரகசியம் மயில் விஷயமாகவே இருக்கும் என்பதால் மீண்டும் பரபரப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story