Pandian stores2: மகளுக்காக பாண்டியன் எடுக்கும் முடிவு… கடுப்பில் செந்தில் மற்றும் கதிர்!

Pandian stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
குமரவேலை என்ன செய்யலாம் எனக் கேட்க கையை உடைக்கலாம் என செந்தில், கதிர் சொல்ல கடுப்பாகி விடுகின்றார். தப்பு செஞ்சவங்களுக்கு தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி வழங்கவும் நம்ம போலீஸுக்கு தான் போகணும்.
அதவிட்டு வெட்டுவேன், குத்துவேன் நீங்க எதுவும் செஞ்சீங்க. நான் சும்மா இருக்க மாட்டேன் எனத் திட்டிவிட்டு செல்கிறார். பாண்டியன் அரசிக்கு நடந்த விஷயத்தையும் அவர் நா பயந்துட்டேன்பா. ரொம்ப பயந்துட்டேன் என்ற வார்த்தையை யோசித்து கவலைப்பட்டு கொள்கிறார்.
என்னங்க இங்க உக்காந்து இருக்கீங்க என கோமதி கேட்க யோசிச்சிட்டு இருக்கேன். ரொம்ப அடைக்கிது எனக் கூற அச்சோ என்ன உடம்புக்கு எனக் கேட்க அதெல்லாம் நல்லாதான் இருக்கு. அரசியை நினைச்சுதான். நம்மக்கிட்ட பேச வேண்டியதை பேச முடியாம தாலிக்கட்டிக்கிட்டு அவனோட வாழப் போய் கஷ்டப்பட்டு இருக்காள்.
நம்ம அவளை திட்டாம இருந்து இருந்தா நம்மிடமும் சொல்லி இருப்பா என்கிறார் கோமதி. எனக்கு கஷ்டமா இருக்கு கோமதி. நான் நல்ல அப்பா இல்லனு செந்தில் சொன்னது நியாபகம் வருது. அரசிக்கு நான் நல்ல அப்பாவா இருந்து இருந்தா அவ சொல்லி இருப்பாளே என்கிறார்.

அந்த குமார் நாய் எடுக்காத போட்டோவை எடிட் பண்ணி அரசியை மிரட்டி இருக்கான். நான் நல்ல அப்பாவா இருந்தா சொல்லி இருக்குமே எனக் கேட்க என்னிடமே அரசி சொல்லலை நீங்க ஏன் உங்க மேல பழி போட்டுக் கொள்றீங்க எனக் கேட்க அரசி விஷயத்தில் பாண்டியன் உடைந்து பேசுகிறார்.
சுகன்யா கோபமாக ரூமில் இருக்க பழனி அமைதியாக வந்து படுக்க வருகிறார். உங்க அக்கா என்ன அந்த கேள்வி கேட்குது நீங்க சும்மா இருக்கீங்க எனக் கேட்க அப்போ நானு வந்து நாலு கேள்வி கேட்டு அடிச்சிருக்கணுமா என்கிறார். உங்களால எனக்கு எந்த பாதுகாப்புமே இல்லை என்கிறார். என்னை கல்யாணம் பண்ணிக்கோனு பின்னாடியே அலைஞ்சியே அப்போ தெரியலை.
சரி கல்யாணம் ஆன பிறகு தெரிஞ்சிட்டுல அப்புறம் ஏன் இங்க இருக்க கிளம்பி போ என்கிறார். இவ்வளத்தையும் பண்ணிட்டு தெனாவெட்டா பேசுற? இன்னொருத்தியா இருந்து இருந்தா இந்நேரம் கிளம்பி போய் இருப்பா நீ இங்க இருக்க காரணம் மறுபடியும் எதுவும் செய்யலாம்னு தான். அந்த நினைப்பு இருந்தா சும்மா இரு எனத் திட்டி விட்டு படுக்கிறார்.
மறுநாள் காலை பாண்டியன் மற்றும் கோமதி சுகன்யாவை அழைத்து பேசலாம் என்கிறார். கோமதி குடும்பத்தை கெடுக்க நினைச்சவளை என்ன உக்கார வச்சி பேசிக்கிட்டு என்கிறார். பழனி அவரை சமாதானம் செய்ய சுகன்யா வர அவரை உட்கார வைத்து பேசுகிறார் பாண்டியன்.
பாண்டியன், நீ இப்படி பண்ணது சரியே இல்ல என்கிறார். கோமதியை குத்தலாக சுகன்யா கூற இவ திருந்த மாட்டானு நான் சொன்னேன் என்கிறார் கோமதி. நீ இங்க இருக்கது பிரச்சனை இல்ல. ஆனா இனிமேல் எதுவும் செய்யாமல் இருக்கணும் எனக் கூற நான் இனிமே அமைதியா இருப்பேன் என்கிறார்.